AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Temba Bavuma: ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் டெம்பா பவுமா.. உலகமே கொண்டாடும் வெற்றி.. காரணம் என்ன?

South Africa Wins WTC 2025: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. டெம்பா பவுமா தலைமையிலான அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்றது. முதல் கருப்பின கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்றது தென்னாப்பிரிக்காவுக்கு வரலாற்றுச் சிறப்பு. பவுமாவின் தலைமைத்துவம் மற்றும் அவரது போராட்டம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

Temba Bavuma: ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் டெம்பா பவுமா.. உலகமே கொண்டாடும் வெற்றி.. காரணம் என்ன?
தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாImage Source: ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jun 2025 17:02 PM IST

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது (WTC Final 2025) கடந்த 2025 ஜூன் 11ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் (Australia vs South Africa) இடையே நடைபெற்றது. லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லாட்ஸ் ஸ்டேடியத்தில் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 27 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணி ஐசிசி கோப்பையை வென்றது. முன்னதாக, 1998ம் ஆண்டு ஹான்சி குரோன்ஜியின் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா (Temba Bavuma) பவுமா முக்கிய காரணமாக இருந்தனர். இதன்மூலம், கேப்டன் பவுமா பல்வேறு சாதனைகளை படைத்தது மட்டுமின்றி, உலகம் போற்றும் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

வலுவான கேப்டனாக உருவெடுத்த டெம்பா பவுமா:

உலக கிரிக்கெட்டில் பவுமா ஒரு வலுவான கேப்டனாக தனது பெயரை பதிவு செய்துள்ளார். கேப்டனாக பவுமா கடந்த 3 ஆண்டுகளில் 4 ஐசிசி போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். அதாவது, 2023 ஒருநாள் உலகக் கோப்பை (அரையிறுதி), 2025 சாம்பியன்ஸ் டிராபி (அரையிறுதி) மற்றும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இலக்கை துரத்தியபோது தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா, அரைசதம் கடந்து விளையாடும்போது அவருக்கு தொடை எலும்பு காயம் ஏற்பட்டது. இருப்பினும், பவுமா விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து விளையாடி தனது அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார்.

தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக கருப்பின கேப்டன் கீழ் சாம்பியன்:

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றதன்மூலம், தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக கருப்பின கேப்டன் கீழ் சாம்பியன் பட்டத்தை வென்றது. 35 வயதான பவுமாவின் பேட்டிங் செயல்திறன் கடந்த சில ஐசிசி போட்டிகளில் சிறப்பானதாக இல்லை. இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய மண்ணில் பவுமா பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதிப்போட்டியில், சிறப்பாக செயல்பட்டதன்மூலம், டெம்பா பவுமா விமர்சகர்களுக்கு பதிலடியும் கொடுத்தார்.

தென்னாப்பிரிக்கா அணியில் பெரும்பாலும் கருப்பின வீரர்கள் பந்து வீச்சாளர்களாக பார்க்கப்பட்டனர். அதன்படி, தென்னாப்பிரிக்கா அணிக்குள் பவுமா ஒரு பேட்ஸ்மேனாக உருவெடுக்க பல சிரமஙக்ளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும், தனது தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்தை விடுக்கொடுக்கவில்லை. இதை முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான ஆஷ்வெல் பிரின்ஸ் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, பேட்டிங்கில் பவுமா சிறப்பாக செயல்பட்டபோதிலும், ஒரு கேப்டனாக மாற பவுமா பல சவால்களை எதிர்கொண்டார்.

டெம்பா என்றால் ‘நம்பிக்கை’:

டெம்பா பெயர் காரணம் குறித்து பவுமா தனது பாட்டியிடம் கேட்டுள்ளார், அதற்கு அவரது பாட்டி, டெம்பா என்றால் நம்பிக்கை என்று கூறியுள்ளார். தனது பாட்டி கொடுத்த பெயரைச் சரியாக நிரூபிக்க டெம்பா பவுமா கடுமையாக போராடியுள்ளார். 2001ம் ஆண்டு கேப் டவுனில் புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க கல்லூரிப் பள்ளியில் பவுமா, 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது பவுமாவிடம் அடுத்த 15 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்று ஆசிரியர் கேட்டுள்ளனர். 6ம் வகுப்பில் பவுமா தனது கட்டுடையில், “15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல உடை அணிந்து, (அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் தாபோ) கைகுலுக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா அணியில் இணைந்ததற்காக அவர் என்னை வாழ்த்துகிறார். இதைச் செய்வதில் நான் வெற்றி பெற்றால், எல்லா வகையிலும் எனக்கு ஆதரவளித்த என் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோருக்கு நான் நிச்சயமாக நன்றி கூற விரும்புகிறேன், குறிப்பாக கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடியதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு:

சரியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் கருப்பு தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை டெம்பா பவுமா படைத்தார். தென்னாப்பிரிக்காவின் முதல் நிரந்தர கறுப்பின கேப்டனான பவுமா உருவெடுத்து, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை நாயகனாகவும் திகழ்ந்தார். தென்னாப்பிரிக்கா கறுப்பின பெரும்பான்மையினராக இருந்தபோதிலும், 1991 முதல் 2020 வரை, தென்னாப்பிரிக்க அணி 3 வடிவங்களிலும் 335 வீரர்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், மூன்றில் இரண்டு பங்கு வெள்ளையர்களே அதிகமாக அறிமுகமானர்கள். 10 சதவீதமே கருப்பு ஆப்பிரிக்கர்களும், இந்திய பாரம்பரிய வீரர்களான ஹாஷிம் ஆம்லா, கேசவ் மகாராஜா போன்றவர்கள் 5% ம் அறிமுகமானார்கள்.

தென்னாப்பிரிக்காவின் கருப்பின கிரிக்கெட் வீரர்களுக்கு பவுமா முதல் முன்மாதிரி அல்ல. அவருக்கு முன்பு, மகாயா நிடினி, வெர்னான் பிலாண்டர் ஆகியோரும் அணியில் இருந்துள்ளனர். இது தவிர, ககிசோ ரபாடா மற்றும் லுங்கி நிகிடி ஆகியோரும் தற்போதைய தென்னாப்பிரிக்கா அணியில் கருப்பின வீரர்களாக உள்ளனர். இருப்பினும், பவுமா மற்றும் ஆஷ்வெல் பிரின்ஸ் மட்டுமே ஒரு பேட்ஸ்மேனாக தன் பெயரை பதிவு செய்துள்ளார். முன்னதாக, ஆஷ்வெல் பிரின்ஸ் நிரந்தர கேப்டனாக நீடிக்க முடியவில்லை என்றாலும், பவுமா நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவின் கருப்பின கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங் செய்யாமல் பந்து வீச வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கருப்பின கிரிக்கெட் வீரர் ஒரு பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து, பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, கேப்டனாகவும் தனது பெயரை பதிவு செய்தார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக உயர்ந்து, தற்போது உலக நாடுகளுக்கு பவுமா முன் உதாரணமாக திகழ்கிறார். இதன் காரணமாக, டெம்பா பவுமாவை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Follow Us