Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England Test Series 2025: முதல் டெஸ்டில் முத்திரை பதிக்குமா சுப்மன் படை.. ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை என்ன..?

Headingley Cricket Ground Pitch Report: 2025ல் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்தான முழுமையான தகவல்கள். இந்த மைதானத்தில் இந்திய அணியின் முந்தைய வெற்றி-தோல்வி விகிதம், பிட்ச் நிலைமை, போட்டி நேரம் மற்றும் ஒளிபரப்பு விவரங்கள் போன்றவற்றை தெரிந்துகொள்வோம். மேலும், இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான அணியின் வாய்ப்புகளை ஆராய்வோம்.

India vs England Test Series 2025: முதல் டெஸ்டில் முத்திரை பதிக்குமா சுப்மன் படை.. ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை என்ன..?
இந்தியா vs இங்கிலாந்துImage Source: ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jun 2025 10:56 AM IST

2025 சாம்பியன் டிராபிக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி (India vs England Test Series) 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team), லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதற்கு முன்பு இந்தியா இந்த ஸ்டேடியத்தில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதேநேரத்தில் இந்திய அணி இங்கு விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில், லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (Headingley Cricket Ground) இந்திய அணி எப்படி செயல்பட்டுள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை:


லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடைசியாக இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், இந்த ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 வெற்றிகளுமே 1996 மற்றும் 2002ம் ஆண்டுகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு முன்பு விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில், 1 போட்டி டிராவிலும், அதிகபட்சமாக இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது.

ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:

லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்சானது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. அதன்படி, போட்டியின் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை காப்பாற்ற போராடுவார்கள். அதன்படி, இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, 3வது மற்றும் 4வது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள். போட்டியில் மேகமூட்டமாக இருக்கும் என்பதாலும், பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த பிட்சில் முதல் இன்னிங்ஸில் இங்கு சராசரி ஸ்கோர் 300 என்றும், மூன்றாவது இன்னிங்ஸில் சராசரி 230 ரன்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை எப்போது, ​​எங்கே காணலாம்..?

முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூன் 20 முதல் 2025 ஜூன் 24 வரை நடைபெறும். போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். டாஸ் பிற்பகல் 3 மணிக்கு போடப்படும். இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டியை காணலாம். மேலும், நேரடி ஒளிபரப்பு ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.