AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

New Catch Rule in Cricket: பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்.. சூர்யகுமார் யாதவ் கேட்ச் சட்டவிரோதமானதா..? 

Cricket Boundary Catch Rule Change 2025: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC) ஆகியவை எல்லைக் கோட்டில் கேட்ச் பிடிக்கும் விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளன. 2025 ஜூன் 17 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதி, பவுண்டரி லைனில் இருந்து பந்தை பிடிக்கும் முறையில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

New Catch Rule in Cricket: பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்.. சூர்யகுமார் யாதவ் கேட்ச் சட்டவிரோதமானதா..? 
சூர்யகுமார் யாதவ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jun 2025 20:36 PM IST

கிரிக்கெட் விளையாட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இதையடுத்து கிரிக்கெட் விளையாட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமநிலையை ஏற்படுத்த, இப்போது ஒரு முக்கிய விதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC) ஆகியவை பவுண்டரி கேட்சிங் விதியில் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளன. டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு, பல வீரர்கள் பந்தை எல்லைக்குள் இருந்து பவுன்ஸ் செய்து பிடிக்கிறார்கள். இது கடந்த 2023ம் ஆண்டு பிக் பாஷ் லீக்கில் (Big Bash League) மைக்கேல் நெசர் கேட்சும், 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் இந்த விதிகளில் மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், எல்லை கோட்டில் கேட்ச் பிடிக்கும் விதிகளில் சில மாற்றங்களை செய்து புதிய விதியை 2025 ஜூன் 17ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. அதே நேரத்தில், இது அக்டோபர் 2026 இல் MCC விதிகளில் இடம் பெறும்.

விதிகள் ஏன் மாற்றம்..?

பவுண்டரி லைனில் நிற்கும் வீரர்கள் பவுண்டரிக்குள் இருக்கும்போது காற்றில் பறந்து வரும் பந்தை ஒருமுறை பவுன்ஸ் செய்து, பின்னர் பவுண்டரியை கடந்து தாவி உள்ளே தள்ளி, பவுண்டரிக்குள் வந்த பிறகு அந்த பந்தை பிடிப்பார்கள். ஆனால், இப்போது இதுபோன்ற கேட்சுகள் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இதற்கு பேட்ஸ்மேன்களுக்கு ரன்களும் வழங்கப்பட இருக்கிறது.

இது தவிட, எந்த வீரரும் எல்லைக்கு வெளியே சென்று, தாவி குதித்து பந்தை உள்ளே எறிந்தால், மற்ற வீரர் அதை பிடித்தால், பந்தை வீசிய வீரரும் எல்லைக்குள் இருக்கும்போது மட்டுமே அது செல்லுபடியாகும்.

பழைய விதி என்ன..?

பழைய விதிப்படி, ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்றால், பந்தை காற்றில் இருக்கும்போது தரையில் கால் படாதவரை பல முறை தொட்டுகொள்ளலாம். பிக் பாஷ் லீக்கில் மைக் நெசர் இதேபோன்ற ஒன்றையே செய்தார். புதிய விதியின்படி, ஒரு பீல்டர் எல்லைக்கு வெளியே காற்றில் குதித்து பந்தை ஒரு முறை மட்டுமே தொட முடியும். ஒரு பீல்டர் காற்றில் இருக்கும்போது பந்தை எல்லைக்குள் தள்ளினால், அவர் எல்லைக்குள் வந்து அதைப் பிடித்தால் மட்டுமே அது சட்டப்பூர்வமானதாகக் கருதப்படும்.

சூர்யகுமார் யாதவ் கேட்ச் சட்டவிரோதமானதா..?

2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், டேவிட் மில்லர் ஒரு ஷாட்டை தூக்கி அடித்தார். ஆனால், சூர்யகுமார் யாதவ் எல்லைக்குள் ஓடி வந்து பந்தை காற்றில் தூக்கி வீசினார். அப்போது, சூர்யகுமார் யாதவ் சமநிலை இழந்ததால், அவர் எல்லையைத் தாண்டியிருந்தார். ஆனால் ஏற்கனவே பந்தை காற்றில் வீசி, சூர்யகுமார் யாதவ் எல்லைக்குள் வந்து கேட்சை பிடித்தார். புதிய விதிகளின்படி, சூர்யகுமார் யாதவின் கேட்ச் சட்டப்பூர்வமானதாகக் கருதப்படும். அதேநேரத்தில், மைக்கேல் நெசர் போன்ற கேட்சுகள் இப்போது சட்டவிரோதமாகக் கருதப்படும்.

Follow Us