Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

South Africa Wins WTC Final 2025: 27 ஆண்டுகளுக்கு பிறகு! ஐசிசி டிராபியை கையில் ஏந்திய தென்னாப்பிரிக்கா.. ரசிகர்கள் உற்சாகம்!

WTC 2025 Final: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தது. ஐடன் மார்க்ரம் அடித்த அசத்தலான சதம் வெற்றிக்கு முக்கிய காரணம். 282 ரன்கள் இலக்கை எளிதில் எட்டிய தென்னாப்பிரிக்கா, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்றது.

South Africa Wins WTC Final 2025: 27 ஆண்டுகளுக்கு பிறகு! ஐசிசி டிராபியை கையில் ஏந்திய தென்னாப்பிரிக்கா.. ரசிகர்கள் உற்சாகம்!
தென்னாப்பிரிக்கா அணிImage Source: PTI and Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 14 Jun 2025 18:05 PM

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (WTC Final 2025) டெம்பா பவுமா (Temba Bavuma) தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம்,  தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு வெற்றியின் நாயகனாக ஐடன் மார்க்ரம் (Aiden Markram) திகழ்ந்தார். 4வது இன்னிங்ஸில் 282 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா துரத்தியபோது, ​​மார்க்ரம் சதம் அடித்து, தென்னாப்பிரிக்கா 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி டிராபியை வெல்ல உதவினார்.  முன்னதாக, தென்னாப்பிரிக்கா அணி கடைசியாக கடந்த 1998ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

சதம் அடித்து கலக்கிய ஐடன் மார்க்ரம்:

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணியானது தென்னாப்பிரிக்கா அணிக்கு 282 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக அடைந்தது. தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, ஐடன் மார்க்ராம் 207 பந்துகளில் 136 ரன்களும், கேப்டன் டெம்பா பவுமா 134 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தனர்.

282 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது தென்னாப்பிரிக்கா அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளிக்க, வியான் முல்டரும் 50 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 70 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா அணி இழந்தபோது, ஐடன் மார்க்ரம் மற்றும் டெம்பா பவுமா ஆகியோர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேப்டன் டெம்பா பவுமா 134 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மார்க்ரம் 207 பந்துகளில் 14 பவுண்டரிகள் உதவியுடன் 136 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். ஐடன் மார்க்ரம் அவுட் ஆனபோது, ​​தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இறுதியாக,  பெட்டிங்கம் மற்றும் கெயில் இணைந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.

போட்டியில் நடந்தது என்ன..?


2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. அந்த, முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்மித் 66 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்காக ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களுக்குள் சுருண்டது. அப்போது, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 207 ரன்களுக்குள் சுருண்டு, தென்னாப்பிரிக்காவிற்கு 282 ரன்கள் என்ற இலக்கை வழங்கியது. 4வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியின் ஐடன் மார்க்ரம் 136 ரன்கள் எடுத்து, 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணிக்கு ஐசிசி பட்டத்தை வென்று கொடுத்தார்.

குறையும் மீன் விலை.. முடிந்தது மீன்பிடி தடைக்காலம்!
குறையும் மீன் விலை.. முடிந்தது மீன்பிடி தடைக்காலம்!...
ராமதாஸ் தலைமையில் புதிய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்...
ராமதாஸ் தலைமையில் புதிய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்......
2 நிமிட காட்சி தான்.. 20 வருட சபதத்தை மீறிய நடிகர் சூர்யா!
2 நிமிட காட்சி தான்.. 20 வருட சபதத்தை மீறிய நடிகர் சூர்யா!...
காலையில் வெந்நீர் அருந்துவது கல்லீரலை சுத்தப்படுத்துமா?
காலையில் வெந்நீர் அருந்துவது கல்லீரலை சுத்தப்படுத்துமா?...
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!...
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...