AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அகமதாபாத் விமான விபத்து.. – இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி

India Cricketers Pay Tribute : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் ஒருவரைத் தவிர விமானத்தில் பயணித்த 241 பேரும் பலியாகினர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் விமான விபத்தில் பலியானவர்களுக்காக கைகளில் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

அகமதாபாத் விமான விபத்து.. – இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jun 2025 17:35 PM IST

குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத் (Ahmedabad) சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர்இந்தியா (Air India) போயிங் 787 ட்ரீம்லைனர் (AI171) விமானம், புறப்பட சில நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என மொத்தம் 242 பேரில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலரும் இந்த விபத்தில் பலியாகினர். இது நாட்டை உலுக்கிய மிகப்பெரிய விமான விபத்தாக பார்க்கப்படுகிறது.இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்கு நாள் வார்ம் அப் போட்டி ஜூன் 13, 2025 அன்று துவங்கியது. இந்த நிலையில் போட்டிக்கு முன், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகள் இடையே நடைபெறும் நான்கு நாள் வார்ம் அப் போட்டிக்கு முன்னதாக, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் விமான விபத்தில் பலியானோருக்காக மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது வீரர்கள் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்திருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்த பிசிசிஐ

 

முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் அந்த அணி வீரர்கள் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் பலியானோருக்காக கைகளில் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

ஆஸ்திரேலேயா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி

 

இந்தியா திரும்பிய கம்பீர்

 இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான வார்ம் அப் போட்டியில் தலைமையேற்க வேண்டிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், குடும்ப சூழ்நிலை காரணமாக  இந்தியா திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் இப்போட்டியில் அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. அவருடன் பந்து மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களான மோர்னே மோர்கல் மற்றும் சிதன்ஷு கோட்டக் ஆகியோர் போட்டியை வழி நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

Follow Us