WTC Prize Money: சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? இந்தியாவுக்கும் பரிசுத்தொகை! ஏன் தெரியுமா?
South Africa Wins WTC 2025: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான அணியின் வெற்றிக்கு ஐடன் மார்க்ரம், ககிசோ ரபாடா, மற்றும் லுங்கி நெகிடி போன்றோர் முக்கிய பங்கு வகித்தனர். சாம்பியன் பட்டத்துடன் ரூ. 30.78 கோடி பரிசுத்தொகையும் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் (WTC Final 2025) பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை, டெம்பா பவுமா (Temba Bavuma) தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுவரை நடந்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அதாவது 2021ல் நியூசிலாந்து அணியும், 2023ல் ஆஸ்திரேலிய அணியும், 2025ல் தென்னாப்பிரிக்கா அணியும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. 2025ல் தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல ஐடன் மார்க்ரம் (Aiden Markram), ககிசோ ரபாடா, டெம்பா பவுமா மற்றும் லுங்கி நெகிடி ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர். கடந்த 2 முறையை காட்டிலும், இந்த முறை அதாவது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அணிக்கு பரிசுத் தொகை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. அதன்படி, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
எவ்வளவு பரிசுத்தொகை..?
The ICC announced a bumper increase in prize money for this edition of the WTC cycle. 🤩
The winner will now receive .2 million while the runner-up will get .1 million. pic.twitter.com/z7ZDxnF6sr
— Cricket.com (@weRcricket) June 12, 2025




2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்திய மதிப்பில் ரூ. 30.78 கோடி பரிசுத்தொகையாக ஐசிசி வழங்கியுள்ளது. அதேநேரத்தில், ரன்னர் அப் ஆகி 2ம் இடம் பிடித்த பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய மதிப்பில் ரூ. 18.56 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 3ம் இந்திய அணிக்கும், கடைசி இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு பல கோடிகள் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.
இந்திய அணிக்கு பரிசுத்தொகை என்ன..?
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 3ம் இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ. 12.13 கோடியும், 4ம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு ரூ. 10.26 கோடியும், 5ம் இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.8.20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை முழுவிவரம்:
- சாம்பியன் – தென்னாப்பிரிக்கா – ரூ. 30.78 கோடி
- ரன்னர் அப் – ஆஸ்திரேலியா – ரூ. 18.56 கோடி
- 3வது இடம் – இந்தியா – 12.13 கோடி
- 4வது இடம் – நியூசிலாந்து – ரூ. 10.26 கோடி
- 5வது இடம் – இங்கிலாந்து – ரூ. 8.20 கோடி
- 6வது இடம் – இலங்கை – ரூ. 7.18 கோடி
- 7வது இடம் – வங்கதேசம் – 6.15 கோடிகள்
- 8வது இடம் – வெஸ்ட் இண்டீஸ் – ரூ. 5.13 கோடி
- 9வது இடம் – பாகிஸ்தான் – ரூ. 4.10 கோடி
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
2021 மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 2ம் இடத்தை பிடித்த இந்திய அணி, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 3வது இடத்தையே பிடித்தது. இந்தநிலையில், 025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்காக இந்திய அணி, வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடங்குகிறது.