AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC Cricket Rule Changes 2025: சர்வதேச போட்டிகளில் மாறப்போகும் விதிகள்.. எப்போது முதல் அமலுக்கு வருகிறது தெரியுமா..?

New ICC Cricket Rules: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025 ஜூன் 17 முதல் புதிய விதிகளை அமல்படுத்துகிறது. மூளை அதிர்ச்சி மாற்று வீரர் விதி திருத்தப்பட்டு, லைக்-டு-லைக் வீரர் மாற்றம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இரண்டு பந்து விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 34 ஓவர்கள் வரை இரண்டு பந்துகள், அதன்பின் ஒரு பந்து பயன்படுத்தப்படும். இந்த மாற்றங்கள் இந்தியா-இங்கிலாந்து டி20 தொடரில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளன.

ICC Cricket Rule Changes 2025: சர்வதேச போட்டிகளில் மாறப்போகும் விதிகள்.. எப்போது முதல் அமலுக்கு வருகிறது தெரியுமா..?
ஐசிசி புதிய விதிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jun 2025 08:00 AM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சர்வதேச கிரிக்கெட் விதிகளில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் குழு இந்த விதிகளை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. இதற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஓகே சொன்ன நிலையில், இந்த விதி மாற்றங்கள் வருகின்ற 2025 ஜூன் 17ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து (India vs England T20 Series) அணிகளுக்கு இடையேயான சமீபத்தில் டி20 தொடரில் மூளையதிர்ச்சி மாற்று விதி குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்தன. இந்த விதியிலும் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் 2 பந்துகளைப் பயன்படுத்துவதில் மாற்றங்கள் நிகழ இருக்கிறது.

இப்போது போட்டி தொடங்குவதற்கு முன்பு, இரு அணிகளும் மூளையதிர்ச்சி மாற்று வீரர்களுக்கான தலா ஐந்து வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாற்று வீரர் ஒரு லைக் டு லைக் வீரராக இருக்க வேண்டும். ஒரு வேகப்பந்து வீச்சாளர் மூளையதிர்ச்சி காரணமாக வெளியேறினால், ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே அவருக்குப் பதிலாக விளையாடுவார். அதேநேரத்தில், பேட்ஸ்மேனுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டால், ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே களமிறங்க முடியும். அதேபோல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமே களமிறங்க முடியும். இப்படி, 5 வீரர்களை கேப்டன்கள் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளலாம்.

இந்தியா-இங்கிலாந்து டி20 தொடரில் ஏற்பட்ட சர்ச்சை:


இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டி20 தொடரின் போது, ​​ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா ஒரு மூளையதிர்ச்சி மாற்று வீரராகக் கொண்டுவரப்பட்டார். இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்து கேப்டன் இந்த விதியை கேள்விக்குள்ளாக்கினார். ஷிவம் ஒரு ஆல்ரவுண்டர், அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிதமான வேகத்தில் விளையாடுவார். வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்காகப் போட்டியை வென்றார். பின்னர் இந்த விதியால் இந்தியா பயனடைந்ததாகக் கூறப்பட்டது.

ஒருநாள் போட்டியின் 2 பந்து விதியில் மாற்றம்:

தற்போது, ​​ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் ஒரு புதிய பந்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இப்போது இந்த விதி மாற்றப்பட்டுள்ளது. இப்போது முதல் ஓவரிலிருந்து 34வது ஓவர் வரை 2 பந்துகள் பயன்படுத்தப்படும். பின்னர் மீதமுள்ள ஓவர்களுக்கு, அணி 2 பந்தில் இருந்து ஒரு பந்தைத் தேர்வு செய்ய வேண்டும். மீதமுள்ள ஓவர்கள் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பந்தைக் கொண்டு மட்டுமே வீசப்படும். மழை காரணமாக போட்டி 25 அல்லது அதற்கும் குறைவான ஓவர்களாகக் குறைக்கப்பட்டால், போட்டி ஒரு பந்தில் மட்டுமே விளையாடப்படும்.

இந்தப் புதிய விதிகள் எப்போது செயல்படுத்தப்படும்?

ஐசிசி கொண்டுவரவுள்ள புதிய விதிகள் வருகின்ற 2025 ஜூன் 17ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற 2025  ஜூன் 17 முதல் நடைபெற உள்ளது. அப்போதிலிருந்து இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் ஓவர்கள் தொடரில் இருந்து தொடங்கும். வருகின்ற 2025 ஜூலை 2 மற்றும் 2025 ஜூலை 10 முதல் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இந்த புதிய விதிகள் பொருந்தும்.

Follow Us