AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WTC 2025-27 Schedule: WTC 2025-27 அட்டவணை வெளியீடு! இந்திய அணி எப்போது யாருக்கு எதிராக விளையாடுகிறது..?

ICC World Test Championship 2025-27: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 அணிகள் 71 போட்டிகளில் விளையாட உள்ளன. ஆஸ்திரேலியா 22, இங்கிலாந்து 21 போட்டிகள் விளையாட, இந்தியா 18 போட்டிகள் விளையாட உள்ளது. இந்திய அணியானது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது.

WTC 2025-27 Schedule: WTC 2025-27 அட்டவணை வெளியீடு! இந்திய அணி எப்போது யாருக்கு எதிராக விளையாடுகிறது..?
சுப்மன் கில் - ரிஷப் பண்ட்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jun 2025 14:37 PM IST

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் (WTC Final 2023-25) பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரு நாளுக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27க்கான அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த சுழற்சியில் 9 அணிகள் இடையே மொத்தம் 71 போட்டிகள் நடைபெறவுள்ளது. 2025-27 சுழற்சியின் முதல் போட்டியானது 2025 ஜூன் 17ம் தேதி இலங்கையின் காலேயில் இலங்கைக்கும், வங்கதேச அணிக்கும் இடையே (SL vs BAN) நடைபெறுகிறது. இந்தநிலையில், எந்தெந்த அணிகள் எப்போது மோதுகிறது..? யார் அதிக போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

யார் அதிக போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள்..?

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையின்படி, இந்த முறை ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 22 போட்டிகளிலும், இங்கிலாந்து 21 போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. அதேநேரத்தில், இந்த 2 அணிகளும் இந்த 2025ம் ஆண்டில் ஆஷஸ் தொடரில் 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை தொடங்குகிறது. இந்த போட்டியில் லீட்ஸில் நடைபெறுகிறது.

இந்திய அணி எத்தனை போட்டிகளில் விளையாடுகிறது..?

ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், வருகின்ற 2025 ஜூன் 20 முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் முதல் தொடர் நடைபெறுகிறது. இதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணியானது வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுதவிர, வெளிநாட்டு மண்ணில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்திய அணி யாருக்கு எதிராக விளையாடுகிறது..?

  • இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள்
  • வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள்
  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 போட்டிகள்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள்

அதிக போட்டிகள் விவரம்:

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே 20 போட்டிகளுக்கு மேல் விளையாடுகிறது. இது இந்திய அணியை விட அதிகம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து,  இங்கிலாந்து 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இது தவிர, இந்தியா 18, நியூசிலாந்து 16, வெஸ்ட் இண்டீஸ் 14, தென்னாப்பிரிக்கா 14, பாகிஸ்தான் 13, இலங்கை 12 மற்றும் வங்கதேசம் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

 

Follow Us