Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TNPL 2025: அஸ்வின் மீது அடுக்கப்பட்ட புகார்! பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்..?

Ravichandran Ashwin Ball Tampering Accusation: தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL), திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது, சீகெம் மதுரை பாந்தர்ஸ் அணி பந்து சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. ஜூன் 14, 2025 அன்று நடந்த போட்டியில், ரசாயனம் பூசப்பட்ட துணியைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் குற்றம் சாட்டுகிறது. TNPL அதிகாரிகள் ஆதாரங்களை கோரியுள்ளனர்.

TNPL 2025: அஸ்வின் மீது அடுக்கப்பட்ட புகார்! பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்..?
ரவிச்சந்திரன் அஸ்வின் - திண்டுக்கல் டிராகன்ஸ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jun 2025 22:36 PM

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (TNPL) போது பந்தை சேதப்படுத்தியதாக முன்னாள் இந்திய வீரரும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனுமான ரவிச்சந்திரன் அஸ்வின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது, சீகெம் மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வின் (Dindigul Dragons) மற்றும் அவரது அணி மீது புகார் அளித்துள்ளது. கடந்த 2025 ஜூன் 14ம் தேதி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் சீகெம் மதுரை பாந்தர்ஸ் (Siechem Madurai Panthers) அணி இடையிலான போட்டியின்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அவரது அணியினர்  பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி குற்றம் சாட்டியது. இதையடுத்து, புகாரின் அடிப்படையில்,  தமிழ்நாடு பிரீமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மதுரை பாந்தர்ஸ் அணியிடம் ஆதாரங்களை கேட்டுள்ளது.

என்ன நடந்தது..?

போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை கனமாக்குவதற்காக ரசாயனங்களில் நனைத்த துண்டுகளைப் பயன்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளது. இதனால், பந்தை சேதமானத்துடன் பந்தை அடிக்கும்போது பொத்தென்ற சத்தம் வந்ததாக மதுரை பாந்தர்ஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தலைமை நிர்வாக அதிகாரி சொன்னது என்ன..?


திண்டுக்கல் டிராகன்ஸ் மீதான புகார் குறித்து தமிழ்நாடு பிரீமியர் லீக் தலைமை நிர்வாக அதிகாரி பிரச்சன்னா கண்ணன் கூறுகையில்” மதுரை பாந்தர்ஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆட்டம் முடிந்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் எந்த புகார் அளிக்க வேண்டும். அதன்படி, அந்த புகாரை நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்கும்படி அவர்களிடம் கேட்டுள்ளோம். அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால், நாங்கள் ஒரு குழுவை அமைப்போம். போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஒரு வீரர் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வது தவறு. அவர்களால் எந்த ஆதாரத்தையும் வழங்க முடியாவிட்டால், அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

போட்டியில் வெற்றிபெற்றது யார்..?

2025 ஜூன் 14ம் தேதி ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சீகெம் மதுரை பாந்தர்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டிக்குப் பிறகுதான, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் அணியினர் மீது பாந்தர்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்தப் போட்டியில், அஸ்வின் தலைமையிலான அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சீகெம் மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதே நேரத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான அணி 12.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது.