AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jasprit Bumrah: பணிச்சுமை, காயம்.. கேப்டன் பதவியை ஏன் வேண்டாம் என்றேன்..? பும்ரா விளக்கம்!

India's Test Captaincy: ஜஸ்பிரித் பும்ரா, ஐபிஎல் போது பணிச்சுமை மற்றும் தனது முதுகு பிரச்சனை குறித்து பிசிசிஐயுடன் பேசியதாக தெரிவித்தார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாததால், கேப்டன் பதவியை ஏற்கவில்லை எனவும், முழுமையான டெஸ்ட் தொடரிலும் அணியை வழிநடத்த முடியாததால் இது இந்திய அணிக்கு நியாயமில்லை என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் வெற்றி பெற்றாலும், மீதமுள்ள போட்டிகளில் தோல்வி அடைந்தார்.

Jasprit Bumrah: பணிச்சுமை, காயம்.. கேப்டன் பதவியை ஏன் வேண்டாம் என்றேன்..? பும்ரா விளக்கம்!
ஜஸ்பிரித் பும்ராImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jun 2025 18:57 PM IST

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah), இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோது அணியின் கேப்டனாக இருந்தார். இதையடுத்து, ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு, பும்ராவே இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிசிசிஐ (BCCI) தேர்வாளர்கள் சுப்மன் கில் (Shubman Gill) இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கில் தலைமையிலான 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸின் ஹெடிங்கியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து தனது கேப்டன் பதவியை தொடங்குவார். அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படாதது குறித்து ஜஸ்பிரித் பும்ரா தனது மௌனத்தை கலைத்தார்.

என்ன சொன்னார் ஜஸ்பிரித் பும்ரா..?

ஸ்கை ஸ்போர்ட்ஸில் தினேஷ் கார்த்திக்கிடம் பேசிய ஜஸ்பிரித் பும்ரா, “ ரோஹித் சர்மா மற்றும் விராட் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஐபிஎல்லின் போது, ​​5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பணிச்சுமை குறித்து விவாதித்தேன். என் முதுகு பிரச்சனை கவனித்து வரும் நபர்களிடம் பேசினேன். நாங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். பின்னர் நான் பிசிசிஐக்கு போன் செய்து நான் தலைமைப் பொறுப்பில் இருக்க விரும்பவில்லை. ஏனென்றால், என்னால் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது.

பும்ரா அளித்த பேட்டி விவரம்:

பிசிசிஐ என்னை தலைமைப் பொறுப்பில் வைக்க முயற்சித்தது. அப்போது, நான் எனக்கு தலைமை பொறுப்பு வேண்டாம் என்று சொன்னேன். ஏனென்றால், நான் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கினால், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு வேறு யாராவது தலைமை தாங்க வேண்டும். இது இந்திய அணிக்கு இது நியாயமில்லை, ஏனெனில் நான் அணியை முதலிடத்தில் வைக்க விரும்பினேன்”. என்று தெரிவித்தார்.

கேப்டனாக பும்ரா செயல்திறன்:

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பும்ரா இதுவரை 3 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பெர்த்தில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஒரே கேப்டன் பும்ராதான். இறுதியில் அந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா வென்ற ஒரே டெஸ்ட் போட்டி இதுவாகும். மீதமுள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

Follow Us