Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ICC Ready for 4 Day Test: 5 நாள் டெஸ்ட் செம போர்! 4 நாள் டெஸ்ட் போட்டியை களமிறக்கும் ஐசிசி.. முக்கிய அணிகளுக்கு விலக்கு!

WTC 2027-29: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), 2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 4 நாள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய முன்னணி அணிகள் இதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. சிறிய நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இது உதவும் என ஐசிசி தெரிவித்துள்ளது. 4 நாள் டெஸ்ட், நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICC Ready for 4 Day Test: 5 நாள் டெஸ்ட் செம போர்! 4 நாள் டெஸ்ட் போட்டியை களமிறக்கும் ஐசிசி.. முக்கிய அணிகளுக்கு விலக்கு!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிImage Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jun 2025 14:31 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகளை அங்கீகரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிறிய நாடுகளும் டெஸ்ட் விளையாட்டை அணுகக்கூடியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றவதே இதன் நோக்கம் என ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தியா (Indian Cricket Team) உள்பட 3 நாடுகள் மட்டும் இந்த 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றத்தை 2027-19 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து நடைமுறைப்படுத்த போவதாக தெரிகிறது.

இங்கிலாந்த்தின் கார்டியன் செய்தித்தாள் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படக்கூடிய இந்த மாற்றம் அதாவது போட்டிகளின் எண்ணிக்கையை ஒருநாள் குறைப்பது சிறிய நாடுகள் அதிக டெஸ்ட் மற்றும் நீண்ட தொடர்களை விளையாட உதவும். 2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் லார்ட்ஸில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது இது விவாதிக்கப்பட்டது” என தெரிவித்திருந்தது.

மேலும், அந்த அறிக்கையில், “ஆஷஸ், பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடருக்காக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இன்னும் அனுமதிக்கப்படும். இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி ஹெடிங்லியில் தொடங்குகிறது.

4 நாள் டெஸ்ட் போட்டி:

நேரம் மற்றும் செலவு காரணமாக பல சிறிய நாடுகள் டெஸ்ட் போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. 4 நாள் டெஸ்ட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மூன்று டெஸ்ட் போட்டிகளின் முழு தொடரையும் 3 வாரங்களுக்குள் விளையாட முடியும். நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க, நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நேரம் ஒரு நாளைக்கு 90 ஓவர்களில் இருந்து குறைந்தபட்சம் 98 ஓவர்களாக அதிகரிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டு இருந்தது.

சர்வதேச போட்டிகளில் 4 நாள் டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளதா..?

பொதுவாக, உள்நாட்டு மற்றும் பயிற்சி போட்டிகளில் மட்டுமே 4 நாள் டெஸ்ட் போட்டி நடத்தப்படும். இருப்பினும், சர்வதேச அளவிலும் ஒரு சில 4 நாள் டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. ஐசிசி முதன்முதலில் கடந்த 2017ம் ஆண்டு இருதரப்பு போட்டிகளுக்கான 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து, 2019 மற்றும் 2023ம் ஆண்டுகளில் அயர்லாந்துக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடியது. கடந்த 2025 மே மாதம் டிரென்ட் பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிராக 4 நாள் டெஸ்ட் போட்டியை விளையாடியது.