AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs England Test Series 2025: இங்கிலாந்து மண்ணில் இதுவரை 3 தொடர் வெற்றியே! கடைசியாக இந்திய அணி வெற்றிபெற்றது எப்போது?

India Test series win in England: 2025 ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர், புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு பெரும் சவாலாக அமையும். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் வெல்வது எளிதல்ல; இந்தியா இதுவரை 9 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அஜித் வடேகர், கபில் தேவ், ராகுல் டிராவிட் ஆகியோர் மட்டுமே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் வென்றுள்ளனர். இந்த சாதனையை சுப்மன் கில் தொடரலாமா என்பது பார்க்கவேண்டும்.

India vs England Test Series 2025: இங்கிலாந்து மண்ணில் இதுவரை 3 தொடர் வெற்றியே! கடைசியாக இந்திய அணி வெற்றிபெற்றது எப்போது?
அஜித் வடேகர் - கபில் தேவ் - ராகுல் டிராவிட்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jun 2025 21:58 PM IST

2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடருடன் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் (India vs England Test Series 2025) புதிய வரலாற்றை தொடங்க இருக்கிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வுக்கு பிறகு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர், சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கலாம். இங்கிலாந்தில் இங்கிலாந்து அணியை தோற்கடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இங்கிலாந்தில் இந்திய அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள்து. அதேநேரத்தில், இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 3 முறை மட்டுமே வென்றுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, சவுரவ் கங்குலி, விராட் கோலி அல்லது எம்எஸ் தோனி (MS Dhoni) போன்றவர்கள் இந்த சாதனையை செய்யவில்லை.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் வென்ற 3 இந்திய கேப்டன்களின் பட்டியல்:

அஜித் வடேகர் (1971)

இந்திய அணி நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தாலும் இங்கிலாந்தில் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. சாதுர்யமான விஷயங்களை கையாண்டு கேப்டனாக இருந்த அஜித் வடேகரின் தலைமையில் இந்திய அணி, கடந்த 1971ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்றது. அஜித் வடேகர் தலைமையிலான இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

1971 முதல் 1974 வரை 16 டெஸ்ட் போட்டிகளில் அஜித் வடேகர் இந்திய அணிக்கு 14 போட்டிகளில் தலைமை தாங்கி, அதில் 4 போட்டிகளில் வெற்றியையும், 4 போட்டிகளில் தோல்வியையும், 6 போட்டிகளை டிராவும் செய்துள்ளார்.

கபில் தேவ் (1986)

உலகக் கோப்பை வின்னரும், ஆல்ரவுண்டர் கேப்டனுமான கபில் தேவ், 1986ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணியை வழிநடத்தினார். அஜித் வடேகரின் வெற்றிக்குப் பிறகு 15 வருட இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பின்னர் லீட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டை 279 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பர்மிங்காமில் நடந்த மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது.

1983 முதல் 1987 வரை 34 டெஸ்ட் போட்டிகளில் கபில் தேவ், இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளது. அதேநேரத்தில் 22 போட்டிகள் டிராவில் முடிந்தநிலையில், ஒரு போட்டி டையில் முடிந்தது.

ராகுல் டிராவிட் (2007)

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கடைசி இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் ஆவார். 2007ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் டிராவிட் இந்தியாவை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், 18 ஆண்டுகால வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி லார்ட்ஸில் டிராவில் தொடங்கியது. பின்னர் நாட்டிங்ஹாமில் நடந்த இரண்டாவது டெஸ்டையும், ஓவலில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது.

2003 மற்றும் 2007 க்கு இடையில் ராகுல் டிராவிட் 25 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கினார். இந்திய அணிக்காக ராகுல் டிராவிட் 25 போட்டிகளில் தலைமை தாங்கி, அதில் 8 போட்டிகளில் வெற்றியையும், 6 போட்டிகளில் தோல்வியையும், 11 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளது.

Follow Us