AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெளியானது நீட் தேர்வு ஹால் டிக்கெட்.. மே 3- இல் தேர்வு – ரிசல்ட் எப்போது தெரியுமா?

NEET Exam Hall Ticket : நாடு முழுவதும் நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதி நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த ஹால் டிக்கெட்டுகளை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

வெளியானது நீட் தேர்வு ஹால் டிக்கெட்.. மே 3- இல் தேர்வு – ரிசல்ட் எப்போது தெரியுமா?
நாடு முழுவதும் நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 27 Apr 2026 10:52 AM IST

மருத்துவத் துறையில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம். பி. பி. எஸ், பி. டி. எஸ். ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம், சித்தா, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, இளங்கலை அறிவியல் – முதுகலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு வருகிற மே 3- ஆம் தேதி நீட் தகுதித் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வில், தமிழகத்தில் 2 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) வெளியிடப்பட இருப்பதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது. ஆனால், சில நிர்வாக பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்றைய தினம் ஹால் டிக்கெட் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

காலை 10 மணிக்கு வெளியான நீட் தேர்வு ஹால் டிக்கெட்

அதற்கு பதிலாக இன்று திங்கள்கிழமை ( ஏப்ரல் 27) காலை 10 மணிக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட இருப்பதாகவும், அதனை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த ஹால் டிக்கெட்டுகளை www.neet.nta.nic.in- என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஹேப்பி நியூஸ்! மே 2 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நீட் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்வது எப்படி

இதில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப எண், மாணவர்களின் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வானது நாடு முழுவதும் 252 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வானது மே 3- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை 2.30 மணி நேரம் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் தேர்வு மையத்துக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்னதாகவே செல்ல வேண்டும்.

ஜூன் மாதத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

720 மதிப்பெண்களுக்கு நடைபெறும் நீட் தகுதி தேர்வில் 180 இயற்பியல் கேள்விகள், 180 வேதியியல் கேள்விகள் 360 தாவரவியல் மற்றும் விலங்கியல், உயிரியல் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்த தேர்வுக்கான முடிவுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவை வருகிற ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்காக மாணவ, மாணவிகள் தீவிரமாக படித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: மத்திய அரசுப் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Follow Us