Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேய் பிடித்துள்ளதாக கூறி கொடுமை.. இளம் பெண்ணை மது குடிக்க வைத்து கொடுமை செய்த சாமியார்!

Kottayam Exorcism Torture on Young Woman | கேரளாவில் இளம் பெண் ஒருவருக்கு பேய் பிடித்ததாக கூறி அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற நிலையில், அவர் சூனியம் வைப்பதாக கூறி இளம் பெண்ணை கொடுமை படுத்தியுள்ளார்.

பேய் பிடித்துள்ளதாக கூறி கொடுமை.. இளம் பெண்ணை மது குடிக்க வைத்து கொடுமை செய்த சாமியார்!
கைது செய்யப்பட்டவர்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2025 22:34 PM IST

கோட்டயம், நவம்பர் 09 : கேரளாவின் (Kerala) கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் இளம் பெண். அவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, அவரது கணவரின் வீட்டார் மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த நபர் இளம் பெண்ணின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு சூனியம் வைப்பதாக கூறி இளம் பெண்ணை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக கடுமையாக துன்புறுத்தியுள்ளார். அதாவது, அந்த பெண்ணை புகை பிடிக்கவும், மது அருந்தவும் அந்த சாமியார் கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் கணவர் உட்பட அவரது வீட்டார் உடந்தையாக இருந்துள்ளனர்.

பேய் விரட்டுவதாக கூறி இளம் பெண்ணை சித்ரவதை செய்த சாமியார்

சாமியார் துன்புறுத்தியன் காரணமாக அந்த இளம் பெண் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால், அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், பெண்ணை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய பெண்ணின் கனவர் அகில் தாஸ், அவரது தந்தை தாஸ் மற்றும் மந்திரவாதி சிவதாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க : அந்தமான் நிகோபார் தீவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. 5.4 ரிக்டராக பதிவு!

முக்கிய காரணமாக இருந்த கணவரின் தாய்

இளம் பெண்ணுக்கு பேய் ஓட்டிய சம்பவத்தில் அவரின் மாமியார் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர் மந்திரவாதியை அழைத்து சூனியத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அவர் பெண்ணின் உடலில் இறந்த உறவினர்களின் தீய சக்திகள் உள்ளதாகவும் அவற்றை விரட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி சம்பத்தன்று காலை 11 மணிக்கு தொடங்கிய சூனியம் வைக்கும் நிகழ்வு இரவு வரை நீடித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா முழுவதும் தாக்குதல் திட்டம் – 3 பேரை கைது செய்த குஜராத் போலீஸ் – பரபரப்பு தகவல்

கால்களை கட்டி வைத்து நடைபெற்ற கொடூரம்

இந்த சூனிய சடங்கின்போது இளம் பெண்ணின் கால்கள் கட்டப்பட்டு அவருக்கு மது குடிக்க கொடுத்தும், பீடி பிடிக்க வைத்தும் கொடுமை படுத்தியுள்ளனர். இந்த நிலையில், இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீ காயங்கள் இருந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.