அந்தமான் நிகோபார் தீவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. 5.4 ரிக்டராக பதிவு!
5.4 Magnitude Earthquake in Andaman and Nicobar | அந்தமான் நிகோபார் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தமான் நிகோபார் நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
போர்ட் பிளேர், நவம்பர் 09 : அந்தமான் (Andaman) கடலில் இன்று (நவம்பர் 09, 2025) பயங்கர நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. சரியாக மதியம் 12.06 மணிக்கு அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் இந்த நிலடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளிவராமல் உள்ளது. இந்த நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்தமான் நிகோபார் தீவை உலுக்கிய நிலநடுக்கம்
அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளை இன்று (நவம்பர் 09, 2025) பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. மதியம் சரியாக 12.06 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center For Seismology) தெரிவித்துள்ளது. சுமார் 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் அந்தமான் நிகோபர் தீவுகளின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குழந்தைகளை குணப்படுத்துவதாக போலி நாடகம்.. பொறியாளரிடம் ரூ.14 கோடி பணம் பறித்தெ பெண் சாமியார்!
5.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கம்
EQ of M: 5.4, On: 09/11/2025 12:06:28 IST, Lat: 12.49 N, Long: 93.83 E, Depth: 90 Km, Location: Andaman Sea.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/uJB3jaDDI9— National Center for Seismology (@NCS_Earthquake) November 9, 2025
உத்தரகாண்டிலும் நிலநடுக்கம்
உத்தரகாண்ட் (Uttarakhand) பாகேஷ்வர் பகுதியிலும் இன்று (நவம்பர் 09, 2025) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2.40 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : வாடிக்கையாளர்களிடம் மாறி மாறி மன்னிப்பு கோரும் நிறுவனங்கள்.. என்ன நடக்குது?
3.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்
EQ of M: 3.6, On: 09/11/2025 14:40:04 IST, Lat: 30.02 N, Long: 79.95 E, Depth: 10 Km, Location: Bageshwar, Uttarakhand.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Q2OV5gihIU— National Center for Seismology (@NCS_Earthquake) November 9, 2025
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 30.02 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.95 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீமானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


