குழந்தைகளை குணப்படுத்துவதாக போலி நாடகம்.. பொறியாளரிடம் ரூ.14 கோடி பணம் பறித்தெ பெண் சாமியார்!
Woman Cheated Man with 14 Crores | புனேவை சேர்ந்த தீபக் என்ற நபர் தனது இரண்டு மகள்களின் உடல்நல கோளாறை சரிசெய்ய பெண் சாமியாரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த பெண் குழந்தைகளை குணப்படுத்துவதாக கூறி ரூ.14 கோடி பணத்தை மோசடி செய்துள்ளார்.
மும்பை, நவம்பர் 08 : மராட்டிய மாநிலம் புனே (Pune) பகுதியை சேர்ந்தவர் மென்பொறியாளரான தீபக் தோலாஸ். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் அவருக்கு நாசிக்கை சேர்ந்த வேதிகா என்ற பெண் சாமியார் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னிடம் உள்ள தெய்வீக சக்தியால் தீபக்கின் மகள்களின் உடல்நல சிக்கலை குணப்படுத்திவிடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு பின்னால் அவர் ஒரு பெரிய சதி திட்டத்தை தீட்டியுள்ளார்.
மகள்களை குணப்படுத்த பணம் வாங்கிய பெண் சாமியார்
தீபக்கின் மகள்களை குணப்படுத்தி கொடுப்பதாக வாக்கு கொடுத்த அந்த பெண் சாமியார் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என கூறி அவரிடம் இருந்து சுமார் ரூ.14 கோடி வரை பணத்தை பெற்றுள்ளார். தனது மகள்கள் எப்படியாவது குணமாக வேண்டும் என்பதற்காக அவர் தான் இங்கிலாந்தில் வேலை பார்த்தபோது வாங்கிய வீடு மற்றும் சொந்த கிராமத்தில் இருந்த நிலம் ஆகியவற்றை விற்பனை செய்து பணத்தை கொடுத்துள்ளார். தீபக்கை தனது சொத்துக்களை விற்பனை செய்ய அந்த பெண் சாமியார் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Delhi Air Quality : காற்று மாசு காரணமாக திணறும் டெல்லி.. தீபாவளிக்கு பிந்தைய நிலை என்ன?
எவ்வளவு பணம் செலவு செய்தாலும் குணமாகாத குழந்தைகளின் உடல்நிலை
தீபக் தனது மகள்கள் எப்படியாவது குணமாக வேண்டும் என்று தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று பணத்தை கொடுத்த நிலையில், அவர்கள் குணமாகாததால் அந்த பெண் சாமியாரிடம் அது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : 73 ஆண்டுகளுக்கு பின் பீகாரில் அதிகளவு வாக்குப்பதிவு.. SIR-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் பெருமிதம்!!
அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் போலீசார் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த நிலையில், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.