பொதுவெளியில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. மன உளைச்சளில் இளைஞர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
Urinating in Public Place in Maharashtra | மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் பொதுவெளியில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த நிலையில், அதனை யாரோ வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அந்த இளைஞர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா, நவம்பர் 07 : மகாராஷ்டிராவில் (Maharashtra) தான் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ வைரலானதற்கு பிறகு கடும் மன உளைச்சளுக்கு ஆளான அந்த இளைஞர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், வீடியோ வைரலானதால் இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நண்பருடன் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்
மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜிநகர் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவர் தனது நண்பருடன் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக தொடங்கியது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்ய தொடங்கிய நிலையில், இது தொடர்பாக அந்த இளைஞருக்கு கேலி, கிண்டல்கள் மற்றும் மிரட்டல்கள் வந்துள்ளது.
இதையும் படிங்க : வீட்டை விற்பனை செய்ய மாஸ்டர் பிளான் போட்ட நபர்.. அதிர்ஷ்டத்தை தட்டி தூக்கிய குழந்தை!




மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்
இந்த நிலையில் அந்த இரண்டு இளைஞர்களும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் தனது நண்பரிடம் இது குறித்து தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தொடர் குறுஞ்செய்திகள், போன் கால்கள் மூலம் வந்த மிரட்டல்களால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி.. 12 பேர் பரிதாப பலி!
தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
அந்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.