Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லடாக்கின் லே நகரில் திடீர் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

Earthquake Hits Lek Ladakh | லடாக்கின் லே நகரில் நேற்று (நவம்பர் 01, 2025) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் லேசான நிலநடுக்கமாக இது உள்ள நிலையில், பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

லடாக்கின் லே நகரில் திடீர் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Nov 2025 07:54 AM IST

 லே, நவம்பர் 02 : லடாக் (Ladakh) யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் நேற்று (நவம்பர் 01, 2025) திடீர் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சற்று லேசானதாக பதிவு செய்யப்பட்ட நிலையில், அங்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், லடாக்கின் லே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

லடாக்கின் லே நகரில் திடீர் நிலநடுக்கம் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

லடாக்கின் லே நகரில் நேற்று (நவம்பர் 01, 2025) மாலை 5.42 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center For Seismology) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முதுமையில் மலர்ந்த காதல்.. 55 வயது பெண்ணை கரம் பிடித்த 65 வயது நபர்!

4.1 ரிக்டர் அளவில் பதிவான திடீர் நிலநடுக்கம்

நிலநடுக்கங்களை பொருத்தவரை சுமார் 70 கிலோ மீட்டர் ஆழம் வரை ஏற்படும் நிலநடுக்கங்கள் ஆழமில்லாத நிலநடுக்கங்களாக அறியப்படுகின்றன. இத்தகைய நிலநடுக்கங்கள் காரணமாக பூமியின் மேற்பரப்பில் அதிக அளவு அதிர்வும் கட்டட சேதங்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எந்த வித ஆபத்துகளும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – 10 பேர் பலி – அதிர்ச்சி சம்பவம்

லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்த நிலையில், அதனை தொடர்ந்து அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இரவு நேரத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமாகியுள்ளனர்.