முதுமையில் மலர்ந்த காதல்.. 55 வயது பெண்ணை கரம் பிடித்த 65 வயது நபர்!
Old Couple Got Married Over Love | கேரளாவில் திருமண வாழ்க்கை தோலிவியடைந்த நிலையில், தனிமையில் வாழ்ந்த இருவர் தங்களது முதுமையில் காதலித்து மீண்டும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். 65 வயதான ரமேச 55 வயதான ஓமனா என்ற பெண்ணை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
திருவனந்தபுரம், நவம்பர் 01 : கேரளா (Kerala) மாநிலம், ஆலப்புழா (Alappuzha) மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேசன். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமான போதிலும் தனியாக வசித்து வந்துள்ளார். அதே பகுதியில், ஓமனா என்ற பெண்ணும் திருமண வாழ்க்கை முறிவடைந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். ரமேசனுக்கும், ஓனமாவுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், நண்பர்களாக பழகி வந்த அவர்களுக்கு இடையே திடீரென காதல் மலர்ந்துள்ளது.
50 வயதுக்கு பிறகு புதிய வாழ்க்கையை தொடங்கிய காதல் ஜோடி
ரமேசனுக்கும், ஓமனாவுக்கு இடையே காதல் மலர்ந்த நிலையில் அது தீவிரமாக மாறியுள்ளது. இந்த நிலையில், தனிமையாக வசிக்கும் அவர்கள் இருவரும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் தங்களது உறவினர்களிடம் கூறியுள்ளனர். அவர்களின் உறவினர்களும் அவர்களது இந்த முடிவுக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருவரும் இணைந்து முதுமை காலத்தில் இனிமையாக வாழ சம்மதித்துள்ளனர்.
இதையும் படிங்க : மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு.. சடங்கு செய்ய மறுத்ததால் மனைவியின் முகத்தில் சுட சுட மீன் குழம்பை ஊற்றிய கணவன்!




ஊர் முன்பு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்த ஜோடி
குடும்பத்தினர் அனுமதியை தொடர்ந்து அவர்கள் ஊர் அறிய திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே அக்டோபர் 15, 2025 அன்று சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி ரமேசன் பலத்த காயமடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக திருமணத்தை தள்ளி வைக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், அன்றைய தினமே திருமணம் செய்துக்கொள்ள வேண்டு என காதல் ஜோடி நினைத்துள்ளது.
இதையும் படிங்க : திருமணமாகி 10 நாட்கள் கூட மகிழ்ச்சியாக இல்லை.. வீடியோ பதிவு செய்துவிட்டு புதுமண பெண் தற்கொலை!
இந்த நினையில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட ரமேசன் கட்டிலில் அமர வைக்கப்பட்டுள்ளார். பின்னர் ஓமனாவை மணக்கோலத்தில் அழைத்து வந்த அவரது உறவினர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். முதுமை காலத்தில் ரமேசன் மற்றும் ஓமனா புதிய காதலை தேடி, திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மலர் தூவி மனதார மணமக்களை வாழ்த்திச் சென்றுள்ளனர்.