Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலமான கேரளா.. பிணறாயி விஜயன் அறிவிப்பு!

Kerala Become Poverty Free State in India | கடவுளின் தேசம், கல்வியின் சிறந்த மாநிலம் என்ற பெருமைகளை கொண்டுள்ள கேராளா தற்போது புதிய பெருமைமை அடைந்துள்ளது. அதாவது, இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலம் என்ற இலக்கை அடைந்துள்ளது.

இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலமான கேரளா.. பிணறாயி விஜயன் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Nov 2025 15:31 PM IST

திருவனந்தபுரம், நவம்பர் 01 : இந்தியாவில் (India) வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் (Poverty Free State) என்ற பெருமையை கேரள (Kerala) மாநிலம் பெற்றுள்ளது. கேரளாவின் நிறுவன தினம் இன்று (நவம்பர் 01, 2025) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த மாநில முதலமைச்சர் பிணறாயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் வறுமை இல்லாத மாநிலமான கேரளா

கேராளாவின் நிறுவன தினம் இன்று (நவம்பர் 01, 2025) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கேரள சட்டமன்ற விதி 300-ன் கீழ் அந்த மாநில முதலமைச்சர் பிணறாயி விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய அவர், இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் என்ற குறிப்பிடத்தக்க இலக்கை கேரளா அடைந்து புதிய சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : National Unity Day : தேசிய ஒற்றுமை தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? வரலாறு இதுதான்!

வரலாற்று சாதனை – பிணறாயி விஜயன் வாழ்த்து

நூற்றாண்டு முன்பு மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்பு தொடக்க ஆண்டுகளில் நீண்ட, நெடிய போராட்டங்கள் மேற்கொண்டு இதனை அடைந்திருக்கிறோம். அந்த போராட்டங்களின் விளைவாக, ஒருங்கிணைந்த கேரளா உருவானது. அதுவே மலையாளிகளின் கனவாகவும் இருந்தது. இன்று ஒருங்கிணைந்த கேரளா உருவாகி 69 ஆண்டுகள் ஆகின்றன. வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலக்கட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம் – யார் இவர்?

அப்போது கிராமப்புறத்தில் 90.7 சதவீதம் என்ற அளவிலும், நகர பகுதிகளில் 88.89 சதவீதம் என்ற அளவிலும் மக்கள் வறுமையில் இருந்தனர். இந்த நிலையில், வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளதாக பிணறாயி விஜயன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.