உச்சநீதிமன்றத்தின் (Supreme Court) மூத்த நீதிபதியான சூர்யகாந்த்தை அடுத்த இந்திய தலைமை நீதிபதியாக இந்திய குடியரசுத் தலைவர் (President) நியமித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நவம்பர் 23, 2025 அன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதனைத் தொடர்ந்து சூர்யகாந்த் நவம்பர் 24, 2025 அன்று பதவியேற்கவுள்ளார். இந்த நியமனத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது சமூக வலைதளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், இந்திய அரசமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவர், நீதிபதி சூர்யகாந்த்தை இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாகும் சூர்யகாந்த்
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யகாந்த் இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி ஆகிறார். அவர் சுமார் 15 மாதங்கள் அந்தப் பதவியில் நீடிப்பார். மேலும் வருகிற பிப்ரவரி 9, 2027 அன்று தனது 65 வயதில் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




இதையும் படிக்க : VIDEO: ரஃபேல் போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!
மத்திய சட்டத்துறை அமைச்சரின் எக்ஸ் பதிவு
In exercise of the powers conferred by the Constitution of India, the President is pleased to appoint Shri Justice Surya Kant, Judge of the Supreme Court of India as the Chief Justice of India with effect from 24th November, 2025.
I convey my heartiest congratulations and best… pic.twitter.com/3X0XFd1Uc9
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) October 30, 2025
யார் இந்த சூர்யகாந்த்?
சூர்யகாந்த் கடந்த 1962, பிப்ரவரி 10 ஆம் தேதி பிறந்தார். அவர் வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பல சாதனைகளை படைத்தவர். தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாறுவதற்கு முன் ஹரியானா மாநிலத்தில் அட்வகேட் ஜெனரல் ஆக பணியாற்றினார். மேலும் இளம் வயதிலேயே தனது திறமையால் மூத்த வழக்கறிராக மக்களால் அறியப்பட்டார். தற்போது அவர் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும், ராஞ்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் விஜிட்டராகவும் உள்ளார்.
இதையும் படிக்க : 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!
இந்திய தலைமை நீதிபதியின் நியமனம் நடவடிக்கை ஒப்பந்தம் எனப்படும் ஆவணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இது நீதிபதிகளின் நியமனம், உயர்வு, இடமாற்றம் போன்ற நடைமுறைகளை விளக்குகிறது. நீதித்துறை துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட சூர்யகாந்த், சட்ட நியாயம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் உறுதியான அணுகுமுறைக்காக அறியப்படுகிறார். அவர் பொறுப்பேற்கும் இந்த நவம்பர் 24, 2025 அன்று இந்திய நீதித்துறையின் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கும் நாளாகக் கருதப்படுகிறது.