Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar : குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருதைப் பெற்ற நடிகர் அஜித் குமார் – கொண்டாட்டத்தில் AK ரசிகர்கள்

Actor Ajith Kumar Padma Bhushan : கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பையும் தாண்டி கார் ரேஸிலும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார். அஜித் குமாரின் இத்தகையத் திறமைகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளார்.

Ajith Kumar : குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருதைப் பெற்ற நடிகர் அஜித் குமார் – கொண்டாட்டத்தில் AK ரசிகர்கள்
அஜித் குமார் மற்றும் திரௌபதி முர்மு Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 28 Apr 2025 19:21 PM

டெல்லி  : நடிகர் அஜித் குமார் (Ajith kumar) பான் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ஹீரோவாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly) படமும் எதிர்பாராத வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியது. தனது படம் ஹிட்டானதைக் கூட பொருட்படுத்தாமல் அஜித் குமார் முழுவதுமாக கார் ரேஸில் (car race) பிசியாக இருந்தார். நடிகர் அஜித் குமார் சினிமாவில் படங்களில் நடிப்பதைத் தாண்டி, வெளிநாடுகளில் நடிக்கும் கார் ரேஸில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார். இவர் இதுவரை 3 நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதுவரை கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல், இரண்டு போட்டியில் 3வது இடத்தையும், ஒரு போட்டியில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்தியாவின் சார்பாக கார் ரேஸில் கலந்துகொண்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்ந்த காரணத்தாலும், தமிழ் சினிமாவில்  சிறந்த நடிகர் என்றார் காரணத்திற்காகவும் அவருக்குப் பத்ம பூஷன் விருதை (Padma Bhushan Award) இந்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து இன்று 2025 ஏப்ரல் 28ம் தேதியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் (Droupadi Murmu)  கையால் அஜித் குமாருக்குப் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது டெல்லி (Delhi) குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலையில் சிறப்பாக நடந்துள்ளது. இணையத்தில் நடிகர் அஜித் குமார் விருதை பெரும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் விருது வாங்கும் வீடியோ :

நடிகர் அஜித் குமார் சிறந்த ரேஸர் மற்றும் சிறந்த நடிகர் என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காகச் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் டெல்லி சென்றிருந்தார். நடிகர் அஜித்திற்கு விருது வழங்கும்போது, மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் என அனைவரும் எழுந்து நின்று கைதட்டிய வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் விருது வாங்கும் புகைப்படம் :

தமிழ் நாட்டில் நடிகர் அஜித் குமார் மட்டுமல்லாமல் நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் போன்றவர்களுக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. நடிகர் அஜித் குமாருக்குப் பத்மபூஷன் விருது கிடைத்த நிலையில், ரசிகர்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்துள்ளனர். நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் போன்ற நடிகர்களின் வரிசையில் நடிகர் அஜித் குமாரும் இணைந்துள்ளார். நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருதைப் பெற்ற நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...