அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி.. 12 பேர் பரிதாப பலி!
12 Killed in Rajasthan Lorry Accident | ராஸ்தானில் நேற்று (நவம்பர் 03, 2025) மிக கடுமையான லாரி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேனில் பயனம் செய்த 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஸ்தானில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற இரண்டாவது பெரிய விபத்தாக இது உள்ளது.
                                ஜெய்ப்பூர், நவம்பர் 04 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் ஜெய்ப்பூரில் (Jaipur) உள்ள உள ஹர்மதா என்ற இடத்தில் சரக்கு லாரில் ஒன்று வாகனங்கள் மீது மோதி கடும் விபத்துக்குள்ளாகியது. அந்த லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதிய நிலையில், இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராஜஸ்தான் லாரி விபத்து குறித்து விரிவாக பார்க்கலாம்.
அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
ராஸ்தானில் ஏற்பட்ட இந்த கடுமையான லாரி விபத்தில், லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சாலை ஓரம் நின்றுக்கொண்டு இருந்த வேன் மீது லாரி மோதிய நிலையில், அதில் இருந்த பக்தர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் சடலம்.. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை!
2 நாட்களில் நடைபெற்ற இரண்டாவது பெரிய விபத்து
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த லாரி விபத்து ராஸ்தானில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற இரண்டாவது பெரிய விபத்தாக உள்ளது. அதாவது, நவம்பர் 02, 2025 அன்று ராஸ்தானின் பளோடி மாவட்டத்தில் இருந்து ஜோத்பூர் நோக்கி வேன் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. அப்போது அந்த வேன் பாரத் மாலா நெடுஞ்சாலையில் உள்ள மடோடா கிராமத்திற்கு அருகே சென்றபோது அது சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேன் ஒன்றின் மீது மோதி கடும் விபத்துக்கு உள்ளானது.
இதையும் படிங்க : பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து – 18 பேர் பலி…. ராஜஸ்தானில் நடந்த சோக சம்பவம்
இந்த கோர விபத்தில் 10 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கொடூர விபத்து சம்பவத்தை தொடர்ந்து நேற்று (நவம்பர் 03, 2025) மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
                        


