Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து – 18 பேர் பலி…. ராஜஸ்தானில் நடந்த சோக சம்பவம்

Bus Accident : ராஜஸ்தான் மாநிலம் பாளோடி மாவட்டத்தில் நவம்பர் 2, 2025 அன்று காலை நடைபெற்ற துயரமான பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் தொடரும் பேருந்து விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து – 18 பேர் பலி…. ராஜஸ்தானில் நடந்த சோக சம்பவம்
பேருந்து விபத்தில் 18 பேர் பலி
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Nov 2025 21:51 PM IST

ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் பாளோடி மாவட்டத்தில் நவம்பர் 2, 2025 அன்று காலை நடைபெற்ற துயரமான பேருந்து விபத்தில் (Bus Accident) 18 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.  காவல்துறை அளித்த தகவலின்படி, பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் லாரி மீது மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாளோடி மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் பிகானேர் மாவட்டத்தின் கொலாயத் என்ற புகழ்பெற்ற புனித தலத்துக்கு சென்றுவிட்டு, ஜோத்பூர் மாவட்டத்தின் சூர்சாகர் பகுதியிலிருந்து திரும்பும்போது இந்த விபத்து நடந்திருக்கிறது.

ராஜஸ்தானில் நடைபெற்ற கோர விபத்தில் 18 பேர் பலி

இந்த விபத்தில் மொத்தம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 3 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இரண்டு பச்சிளம் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!

இந்த துயரச்சம்பவம் குறித்து ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,“இந்த துயரமான நேரத்தில் அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நிற்கிறது. அவர்களுக்கு அரசு சார்பில் அனைத்து தேவையான உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பேருந்தில் தொடரும் விபத்துகள்

இது ராஜஸ்தானில் பேருந்து விபத்து நடப்பது முதன்முறை அல்ல.  கடந்த மாதம் ஜெய்சல்மேர் பகுதியில் ஒரு ஸ்லீப்பர் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்து ஏர் கண்டிஷனரில் மின் கசிவு காரணமாக  ஏற்பட்டது. அந்த பேருந்தில் முன் பக்கம் மட்டுமே கவு இருந்ததால், பலர் சிக்கி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோத மாற்றங்கள் குறித்து மாநிலம் முழுவதும் தீவிர சோதனை தொடங்கி வருகிறது.

இதையும் படிக்க : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – 10 பேர் பலி – அதிர்ச்சி சம்பவம்

மேலும், அதே மாத இறுதியில், உத்தரபிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஸ்லீப்பர் பேருந்து, மின்கம்பத்துடன் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர், இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். தொடர்ச்சியான பேருந்து விபத்துகள் மாநிலத்தில் சாலை பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.  வாகன பராமரிப்பு, அனுமதி விதிமுறைகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு அம்சங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.