Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீட்டை விற்பனை செய்ய மாஸ்டர் பிளான் போட்ட நபர்.. அதிர்ஷ்டத்தை தட்டி தூக்கிய குழந்தை!

Telangana House Lottery Won By a Kid | தெலங்கானாவில் பல முயற்சிகளுக்கு பிறகும் தனது வீடு விற்பனையாகாததால் ஒருவர் பரிசு கூப்பன் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளார். அதன்படி, 10 மாத குழந்தை அந்த பரிசை தட்டிச் சென்றுள்ளது.

வீட்டை விற்பனை செய்ய மாஸ்டர் பிளான் போட்ட நபர்.. அதிர்ஷ்டத்தை தட்டி தூக்கிய குழந்தை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Nov 2025 19:14 PM IST

நகரி, நவம்பர் 04 : தெலங்கானா (Telangana) மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ராமபிரம்மன். இவர் தனக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், அவரது வீடு மற்றும் நிலத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர் தனது வீடு மற்றும் நிலத்தை விற்பனை செய்ய வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படி தனது வீடு மற்றும் நிலத்தை விற்பனை செய்ய அவர் என்ன நடவடிக்கை மேற்கொண்டார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீடு மற்றும் நிலத்தை விற்பனை செய்ய மாஸ்டர் பிளான் போட்ட நபர்

அதாவது அந்த நபர் லாட்டரி சீட்டு போல ரூ.500-க்கு பரிசு கூப்பனை தயாரித்து அதனை பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். அந்த கூப்பன்களை வாங்கிய நபர்களில் ஒரு அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்து அந்த நபருக்கு தனது வீடு மற்றும் நிலத்தை பரிசாக வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கான விளம்பர பலகை வைத்து அவர் விளம்பரம் செய்து வந்துள்ளார். அதனை நம்பி இலவச வீடு மற்றும் நிலத்துக்கு ஆசைப்பட்டு பலரும் அந்த கூப்பனை வாங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் சடலம்.. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை!

10 மாத குழந்தையின் பெயரில் பரிசு கூப்பன் வாங்கி தந்தை

இந்த ஆஃபருக்கு ஆசைப்பட்டு பலரும் போட்டி போட்டுக்கொண்டு பரிசு கூப்பன்களை வாங்கிய நிலையில், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ஒருவரும் கூப்பனை வாங்கியுள்ளார். அவர் தனது பெயர், மனைவி மற்றும் தனது 10 மாத குழந்தையின் பெயரிலும் இந்த பரிசு கூப்பனை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல் நடைபெற்றுள்ளது. அப்போது சங்கரின் 10 மாத குழந்தையான ஹன்சிகாவின் பெயருக்கு பரிசு விழுந்துள்ளது.

இதையும் படிங்க : பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து – 18 பேர் பலி…. ராஜஸ்தானில் நடந்த சோக சம்பவம்

தனது குழந்தையின் பெயரில் ரூ.16 லட்சத்துக்கான வீடு மற்றும் நிலம் கிடைத்தது அவரது பெற்றோர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.