AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போராட்டத்திற்கு மத்தியில் போலி தகவல்கள்.. 400 பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளை முடக்கிய டெல்லி போலீஸ்!

400 Pakistan Social Media Accounts Blocked | நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 400 பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளை டெல்லி போலீஸ் முடக்கியுள்ளது.

போராட்டத்திற்கு மத்தியில் போலி தகவல்கள்.. 400 பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளை முடக்கிய டெல்லி போலீஸ்!
வீடியோ வெளியிட்ட டெல்லி துணை கமிஷனர் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jul 2026 15:01 PM IST

டெல்லி, ஜூலை 24 : டெல்லியில் (Delhi) கரப்பாண்பூச்சி ஜனதா கட்சியின் (CJP – Cockroach Janata Party) போராட்டம் வெடித்துள்ள நிலையில், டெல்லி போலீசார் 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் சமூக வலைத்தள கணக்குகளை முடக்கியுள்ளனர். இந்தியா முழுவதும் வெடித்துள்ள போராட்டத்தால் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அதனை பயன்படுத்தி இந்த கணக்குகள் போலி மற்றும் தவறான தகவல்களை பரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், 400 பாகிஸ்தான் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கணக்குகள் முடக்கப்பட்டதன் காரணம் என்ன? -டிசிபி விளக்கம்

இது தொடர்பாக நேற்று (ஜூலை 23, 2026) மாலை, டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சுமித் ஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த 400-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள், ஆபரேஷன் சிந்தூரின் (Operation Sindoor) போது இயங்கிய அதே டொமைனில் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் பரபரப்பு.. நேருக்கு நேர் நின்று முழக்கமிட்ட ஆளும் – எதிர்க்கட்சி எம்பிக்கள்!!

இந்த சமூக ஊடக கணக்குகள் மூலம் போலி மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது நிலவும் பதற்றமான சூழலை பயன்படுத்திக்கொண்டு இந்த பாகிஸ்தானை மையமாக கொண்ட கணக்குகள் போலி மற்றும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளன. இந்த கணக்குகள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன என்று டிசிபி சுமித் ஷா கூறியுள்ளார்.

பதிவுகளை உறுதி செய்யாமல் பகிராதீர்கள்

போலியான தகவல்களை பரப்பி இளைஞர்களின் கவனத்தை திசை திருப்புவதையே ஒரே நோக்கமாக கொண்டு இந்த கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளன. சமூக ஊடகங்களில் பார்க்கும் எந்த ஒரு பதிவையும் உறுதி செய்யாமல் பகிர வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அசாமில் கடுமையான வெள்ள பாதிப்பு.. 6.53 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு

மத்திய அரசு கரப்பாண்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்த சமயத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை தொடங்கிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில், ஏராளமானவர்கள் ஜந்தர் மந்தரில் திரண்டு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us