Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீண்ட நேர சூரிய கிரகணம்…6.23 நிமிடம் இருளில் மூழ்கும் உலகம்…எப்போது-எங்கு பார்க்கலாம்!

World Longest Solar Eclipse: நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரிய கிரகணம் 2027- ஆம் ஆண்டு நிகழ உள்ளது. இந்த அரிய சூரிய கிரகணத்தால் உலகமே 6:23 நிமிடங்கள் இருளில் மூழ்க உள்ளது. சூரிய கிரணத்தை இந்தியாவல் இருந்து பார்க்க முடியுமா.

நீண்ட நேர சூரிய கிரகணம்…6.23 நிமிடம் இருளில் மூழ்கும் உலகம்…எப்போது-எங்கு பார்க்கலாம்!
நீண்ட நேர சூரிய கிரகணம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Jan 2026 15:55 PM IST

நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு 2027 ஆகஸ்ட் 2- ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தின் போது, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் சுமார் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கலாம் என்று கூறப்படுகிறது. சூரிய கிரகணமானது, பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவானது சுமார் 6 நிமிடங்கள் 23 வினாடிகளுக்கு நிலையாக நிற்க உள்ளது. இந்த நிகழ்வு தான் உலகின் மிக நீண்ட நேரம் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான சூரிய கிரகணம் போல இருக்காது. இரு வெவ்வேறு இடங்களில் சுற்று வட்ட பாதைகளில் பயணம் மேற்கொள்ளும் நிலவும், பூமியும் சூரியனின் நேர்கோட்டில் வரும். இதனால், பூமிக்கு இடையே வரும் நிலவானது, சூரியனை முழுமையாக மறைக்கும். இந்த சூரிய கிரகணமானது அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் தெளிவாக தெரியும்.

சூரிய கிரகணம் நிகழ்வது மிக அரிது

இதனை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியனை விட நிலவானது மிக சிறிது என்பதால் மிக நீண்ட நேரம் சூரிய கிரகணம் நிகழ்வது அரிதாகும். அதன் அடிப்படையில், 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2- ஆம் தேதி பூமிக்கு சற்று அருகில் நிலவு வரும். இதனால், வழக்கமான அளவை விட பெரிதாக கண்களுக்கு புலப்படும். இதே போல, சூரியன் கோளிலிருந்து பூமியின் தொலைவு சற்று அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க: ‘1,000 ஆண்டுகள்’.. தாக்குதல்களையும் தாண்டி நிலைத்து நிற்கும் சோமநாதர் கோயில்.. பிரதமர் மோடி பகிர்ந்த நினைவுகள்..

இந்தியாவில் எப்படி தெரியும்

இதன் காரணமாக சூரியன் சற்று சிறியதாகவே தெரியும். இதனால், நிலவு, சூரியனை முழுமையாக மறைக்கிறது. இந்த நிகழ்வானது நீண்ட நேரம் நீடிக்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு மற்ற நாடுகளை விட இந்தியாவில் பகுதியாகவே தெரியும். இதே போல, வடமேற்கு மாநிலங்களான மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை காண முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

10 முதல் 30 சதவீதம் வரை சூரியன் மறைவு…

அதாவது, சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை சூரியன் மறைவதை நம்மால் பார்க்க முடியும். இந்த சூரிய கிரகணமானது இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கும் என்பதால், முழுமையான சூரிய கிரகணத்தை பார்ப்பதற்குள் சூரியன் இந்தியாவில் மறைந்து விடும். அதன்பின்னர்,  இருள் சூழ்ந்து விடும் என்பதால் இந்தியாவில் இருந்து இந்த அரிய சூரிய கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது. இதனால், சில சுற்றுலாப பயணிகள் சூரிய கிரகணம் தெரியும் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க: ரூ.1,464 கோடி போலி ஜிஎஸ்டி பில்…மோசடி முயற்சியில் 4 பேர் கைது…அமலாக்கத்துறை நடவடிக்கை!