தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர் ராஜ் நிதிமோறு சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாட்களாக இருந்த காதலுக்குப் பிறகு, டிசம்பர் 1ஆம் தேதி ஈஷா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இது இருவருக்கும் இரண்டாவது திருமணமாகும். திருமணத்திற்குப் பிறகு தற்போது இந்த தம்பதி போர்ச்சுகலில் ஹனிமூனை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர். இதற்கான புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படங்களில் இருவரும் உணவுகளை ரசித்து மகிழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.