Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி KYV கட்டாயமில்லை.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

NHAI decided to quit KYV Process | ஃபாஸ்டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு உங்கள் வாகனங்களை தெரிந்துக்கொள்ளுங்கள் என்ற கேஒய்வி அம்சம் அமலில் இருந்த நிலையில், இனி புதியதாக வாங்கப்படும் ஃபாஸ்டேக்குகளுக்கு கேஒய்வி கட்டாயம் இல்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இனி KYV கட்டாயமில்லை.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Jan 2026 11:07 AM IST

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highway Authority Of India) ஏற்கனவே அமலில் இருந்த விதியில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது பிப்ரவரி 1, 2026 முதல் புதிய பாஸ்டேக் (Fastag) ரிலீஸ்களுக்கு உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் (KYV – Know Your Vehicle) செயல்முறையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை பயணிகளுக்கு சிரமமில்லாத அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஃபாஸ்டேக்கை செயல்படுத்துவதற்கு முன்பு வாகன சரிப்பார்ப்பு பொறுப்பை வெளியிடும் வங்கிகளிடம்  முழுமையாக ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த புதிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் வாகனங்களை தெரிந்துக்கொள்ளுங்கள் அம்சம் என்றால் என்ன?

தற்போது அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான சேவைகளுக்கு கேஒய்சி (KYC – Know Your Customer) மிக முக்கிய ஒன்றாக உள்ளது. அவ்வப்போது கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், வாகனம் குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்ளும் கேஒய்வி என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. ஃபாஸ்டேக் முறைகேடுகள் அதிகரித்ததன் காரணமாக இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

இதையும் படிங்க : ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. சேவை பாதிப்பு!

ஃபாஸ்டேக்கில் நடைபெற்ற முறைகேடுகள்

அதாவது லாரி ஓட்டுநர்கள், கார்களுக்கான ஃபாஸ்டேக்குகளை பயன்படுத்தி குறைவான கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல வகையான மோசடிகள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் நடைபெற்ற நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உங்கள் வாகனங்களை தெரிந்துக்கொள்ளுங்கள் அம்சத்தை அறிமுகம் செய்தது.

இதையும் படிங்க : ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?

இனி கேஒய்வி அவசியமில்லை

அனைத்து வாகனங்களுக்கும் கேஒய்வி கட்டாயமாக இருந்த நிலையில், ஏற்கனவே கார்களுக்கு வழங்கப்பட்ட ஃபாஸ்டேக்குகளுக்கு கேஒய்வி இனி வழக்கமான தேவையாக இருக்காது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை ஃபாஸ்டேக் கழன்று விழுந்தாலோ, தவறான வழங்கல் அல்லது தவறாக பயன்படுத்துவது போன்ற புகார்கள் எழும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட நேர்த்திற்கு மட்டும் கேஒய்வி கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.