மோகன்லால் நடித்த பிரம்மாண்ட திரைப்படமான ‘வ்ருஷபா’ வெளியான ஏழு நாட்களுக்குப் பிறகும் பாக்ஸ் ஆபிஸில் முன்னேற முடியாமல் கடுமையாக தடுமாறி வருகிறது. வெளியான முதல் நாளிலிருந்தே படம் மிகவும் பலவீனமான வசூல் எண்ணிக்கைகளையே பதிவு செய்து வருவதுடன், வசூலில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. ஏழாவது நாள் முடிவில், படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூபாய் 2.16 கோடி மட்டுமே. இதில் இந்திய நெட் வசூல் ரூபாய் 1.64 கோடி, இந்திய கிராஸ் வசூல் ரூபாய் 1.91 கோடி ஆகும். வெளிநாடுகளிலும் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை; அங்கு வசூல் வெறும் ரூபாய் 25 லட்சம் தான்.