அமேசான் காடுகளில் வாழும் கொட்டாத தேனீக்கள் உலகிலேயே முதன்முறையாக சட்ட உரிமைகள் வழங்கப்பட்ட பூச்சிகளாக மாறியுள்ளன. பெருவில் உள்ள சடிப்போ மற்றும் நௌட்டா என்ற இரண்டு நகராட்சிகள் இந்த மாத தொடக்கத்தில் இதற்கான சட்ட உத்தரவை நிறைவேற்றியுள்ளன. இந்த நடவடிக்கை, உலகில் மிகப் பழமையான தேனீ இனங்களில் ஒன்றாகக் கருதப்படும் கொட்டாத தேனீக்களை பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப ஆண்டுகளில், காலநிலை மாற்றம், காட்டுத்தீ, வனச்சேதம் போன்ற காரணங்களால் இந்த தேனீக்கள் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.