இந்திய முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம் வைஃபை காலிங் எனப்படும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இனி வைஃபை இணைப்பை பயன்படுத்தி நேரடியாக குரல் அழைப்புகளையும், மெசேஜ்களையும் அனுப்பவும் பெறவும் முடியும். இதனால், சிக்னல் பலவீனமாக இருக்கும் இடங்களிலும் மேம்பட்ட தொடர்பு கிடைக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த வோவைஃபை சேவை, குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.