ஆவேஷம் 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஃபகத் பாசில்

Fahadh Faasil About Aavesham 2 Movie: நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஆவேஷம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்பது குறித்து நடிகர் ஃபகத் பாசில் அப்டேட் கொடுத்துள்ளார்.

ஆவேஷம் 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஃபகத் பாசில்

ஃபகத் பாசில்

Published: 

09 Feb 2026 14:28 PM

 IST

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாசில். இவரது இயக்கத்தில் மலையாளம் மற்றும் தமிழ் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது மகனாக மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் ஃபகத் பாசில். இவர் நாயகனாக அறிமுகம் ஆன போது பல நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி வெளி நாட்டிற்கு சென்று நடிப்பு சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு மீண்டும் மாலையாள சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் மீண்டும் நடிக்கத் தொடங்கிய பிறகு அது அவரது சினிமாவிற்கு கம்பேக்காம அமைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தற்போது பான் இந்திய அளவில் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ஃபகத் பாசில்.

மேலும் இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியபோது அவரை கிண்டலடித்தவர்கள் அனைவரும் வாயடைத்து போகும் அளவிற்கு தனது சிறப்பான நடிப்பின் மூல உச்ச நடிகராக மாறினார் நடிகர் ஃபகத் பாசி. நாயகன், வில்லன், காமெடி மற்றும் சிறப்பு கதாப்பாத்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் பின்னி எடுப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஆவேஷம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஃபகத் பாசில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஆவேஷம் 2 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன ஃபகத் பாசில்:

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் ஆவேஷன். ரங்கன் சேட்டன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ஃபகத் பாசில் வெளியிட்ட நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2027 அல்லது 2028-ம் ஆண்டில் நிச்சயமாக தொடங்கும் என்று ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குநர் ஜித்து மாதவன் தற்போது சூர்யாவின் 47-வது படத்தை எழுதி இயக்கி வரும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு ஆவேஷம் 2 படத்தின் பணிகளை தொடங்குவார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று… 11 வருடங்களை கடந்தது என்னை அறிந்தால் படம்!

இணையத்தில் கவனம் பெறும் ஃபகத் பாசில் பேச்சு:

Also Read… வித் லவ் முதல் யோகிடா வரை… இந்த வாரம் தியேட்டரின் என்ன படம் பார்க்கலாம்

Follow Us
Related Stories
70ஸ் நடிகரின் மகள் டூ பிரபல நடிகரின் மனைவி.. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா?
Sivakarthikeyan: அஜித்தின் படத்தை தயாரிப்பீர்களா? எது நானா.. – வேடிக்கையாக பதிலளித்த சிவகார்த்திகேயன்!
Priyanka Chopra: 6 -7 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்திய சினிமாவில்… வாரணாசி படத்திற்காக காத்திருக்கிறேன் – பிரியங்கா சோப்ரா பேச்சு!
With Love: 4வது வாரத்திற்கு பிறகும் திரையரங்குகளில் சாதனை படைத்த வித் லவ் திரைப்படம்!
Priyanka Mohan: ‘தலைவர் 173 படத்தில் நடிக்கிறேனா?’ – உண்மையை உடைத்த பிரியங்கா மோகன்!
Sai Abhyankkar: ‘D55 படத்திற்காக ஸ்பெஷல் ஆல்பம் தயாராகிறது’ – ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சாய் அபயங்கர்!
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..