AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Silambarasan TR: இந்த 3 சிம்பு படங்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?

சிலம்பரசன் TR நடித்த மல்டி ஸ்டார் படங்களான வானம், செக்க சிவந்த வானம், தக் லைஃப் ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரம் இடையே ஒரு ஒற்றுமை இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். இந்தப் படங்களின் வெற்றி மற்றும் தோல்வி பற்றியும், சிம்புவின் நடிப்பு மற்றும் ரசிகர்களின் எதிர்வினைகள் பற்றியும் காணலாம்.

Silambarasan TR: இந்த 3 சிம்பு படங்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?
நடிகர் சிலம்பரசன் டிஆர்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 09 Jun 2025 08:10 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிலம்பரசன் டிஆர் (Silambarasan TR) நடிக்கும் மல்டி ஸ்டார் படங்களுக்கு ஒரு ஒற்றுமை இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பலர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே ஹீரோவாக மிளிர்கிறார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர் ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் டிஆர். பன்முக கலைஞரான டி.ராஜேந்தரின் (T Rajendar) மூத்த மகனான சிம்பு தனது ஒரு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். குழந்தை சிம்புவாக பல படங்களில் நடித்த அவர், சொன்னால் தான் காதலா படத்தில் வரும் இரு பாடல்கள் மூலம் இளம் வயதில் எண்ட்ரீ கொடுத்தார். அதன்பின்னர் காதல் அழிவதில்லை படம் ஹீரோவானார். இன்றைக்கு தமிழ் சினிமாவில் அதிகமாக இளம் வயது ரசிகர்களை வைத்திருப்பதில் முதலிடத்தில் இருப்பவர் சிலம்பரசன் தான் என சொல்லலாம்.

கிட்டதட்ட 48 படங்களில் நடித்து விட்ட சிம்புவுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதனால் வரும் காலம் சிம்புவின் ஆட்சி தான் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் அவர் நடித்த மல்டி ஸ்டார் படங்கள் பற்றி காணலாம்.

சிம்புவின் மல்டி -ஸ்டார் படங்கள்


வானம்: 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீமேக் தான் வானம் படமாக தமிழில் வெளியானது. க்ரிஷ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிலம்பரசன், பரத், சந்தானம், அனுஷ்கா, வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் நடிகர் சிம்புவின் நடிப்பு கிளைமேக்ஸ் காட்சியில் அருமையாக இருந்ததாக இன்றளவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

செக்க சிவந்த வானம்: 2018 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, டயானா எராப்பா உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தக் லைஃப்: மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் 2025 ஆம் ஆண்டு சிம்பு நடித்து வெளியான படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

ரசிகர்களின் வருத்தம்

மேலே குறிப்பிட்ட 3 படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இப்படி மல்டி ஸ்டார் படங்களில் சிம்பு போன்ற முன்னணி நடிகர் நடிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். ஆனால் இந்த 3 படங்களிலும் சிம்புவின் கேரக்டர் கடைசியில் இறந்து விடுவது போல காட்டப்பட்டிருக்கும். இதுதான் ரசிகர்களின் வருத்தத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

Follow Us