AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T.R.B. Rajaa Tamil Nadu Election: மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா மும்முறை வெற்றி.. மீண்டும் வெற்றி வசமானால் அமைச்சரவையில் இடம் உறுதி?

Tamil Nadu Elections 2026 : திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது முதல் 3 சட்டமன்ற தேர்தல்களில் தொடர் வெற்றியை பதிவு செய்ததுடன், தற்போது அமைச்சராக இருந்து வரும் டி.ஆர்.பி.ராஜா மீண்டும் வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

T.R.B. Rajaa Tamil Nadu Election: மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா மும்முறை வெற்றி.. மீண்டும் வெற்றி வசமானால் அமைச்சரவையில் இடம் உறுதி?
மன்னார்குடியில் வெற்றி வசப்பட்டால் அமைச்சரவையில் இடம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 26 Mar 2026 12:19 PM IST

திமுகவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்து வருபவர் தளிக்கோட்டை ராசு தேவர் பாலு ராஜா என்று அழைக்கப்படும் டி. ஆர். பி. ராஜா. இவர், கடந்த 1976- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12- ஆம் தேதி டி. ஆர். பாலு- ரேணுகா தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தார். அரசியல் சார்ந்த குடும்ப பின்னணி இருப்பதால், இவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கட்சி பணியாற்றத் தொடங்கினார். அப்போது, கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் களமிறக்கப்பட்ட டி. ஆர். பி. ராஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கத்தை வீழ்த்தி 48. 93 சதவீத வாக்குகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்து எம்எல்ஏவாக தேர்வானார். பின்னர், 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களமிறக்கப்பட்ட டி. ஆர். பி. ராஜா அதிமுக வேட்பாளர் எஸ். காமராஜ் வீழ்த்தி 48.71 சதவீத வாக்குகள் பெற்று 2- ஆவது முறை வெற்றியை பதிவு செய்தார்.

3- ஆவது முறை எம்எல்ஏ பதவியை அடைந்த டிஆர்பி ராஜா

இதைத் தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கத்தை வீழ்த்தி 3- ஆவது முறையாக எம்எல்ஏ பதவியை அடைந்தவுடன் 45.34 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 3 சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் அடுத்தடுத்து தனது வெற்றியை பதிவு செய்து வந்தார். ஆனால், 2011 சட்டமன்ற தேர்தலில் இருந்து அவர் வாக்கு சதவீதம் குறைவாகவே பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: Natham R. Viswanathan Tamil Nadu Election: நத்தம் தொகுதியில் மீண்டும் களம் காண்பாரா ஆர்.விஸ்வநாதன்!

தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்

கடந்த 2021- ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் முதன்மைச் செயலாளராகவும், 2022- ஆம் ஆண்டில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் 2- ஆவது செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 2021- ஆம் ஆண்டு தமிழக மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் மதிப்பீட்டுக்கான சட்டக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆகவும் இருந்து வருகிறார்.

வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சரவையில் இடம்

தற்போது, முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்து வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மன்னார்குடி தொகுதியில் டிஆர்பி ராஜா களம் இறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த தேர்தலில் மீண்டும் வெற்றியே வசமாக்கி திமுக அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என்று அந்த கட்சியினர் மற்றும் டி. ஆர். பி. ராஜா ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: V. Senthil Balaji Tamil Nadu Election: கட்சி மாற்றம்.. சிறைவாசம்.. தொடர் வெற்றியை வசமாக்குவாரா செந்தில்பாலாஜி?

Follow Us