திமுகவில் 60 புது முகங்களுக்கு வாய்ப்பு.. 3 அமைச்சர்களுக்கு ‘சீட்’ இல்லை.. முழு விவரம்!!
Tamilnadu Assembly Election: கடந்த தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோ தங்கராஜ், அமைச்சர் ஆனார். இந்த முறை அவருடைய தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது. எனவே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்ட தாராபுரம் (தனி) தொகுதிக்கு புதுமுக வேட்பாளராக டாக்டர் இந்திராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
Tamilnadu Polls 2026: சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், வலுவான கூட்டணியை கட்டமைத்தார். தற்போது இந்த கூட்டணி ‘மெகா’ கூட்டணியாக உருவாகியுள்ளது. முதல்வரின் நேரடி தலையீட்டின் மூலம் மற்ற கட்சிகளுடன் சுமூகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுற்றுள்ளது.
இதில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பதில் இழுபறி நிலை நீடித்தாலும், இறுதியாக சுமூக முடிவு எட்டப்பட்டது. தொகுதி ஒதுக்கீட்டிற்கு இடையே திமுக வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியை முதல்வர் ஸ்டாலின் 4 நாட்களாக மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், வாய்ப்பு கிடைக்காதவர்கள் மத்தியில் கட்சியில் எதிர்ப்பலையும் எழுந்துள்ளது. குறிப்பாக இதில் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெரம்பூரில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி – தவெக திட்டம் இதுதான்




வாய்ப்பு மறுக்கப்பட்ட 3 அமைச்சர்கள் யார் யார்?
இந்நிலையில், கடந்த தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோ தங்கராஜ், அமைச்சர் ஆனார். இந்த முறை அவருடைய தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது. எனவே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்ட தாராபுரம் (தனி) தொகுதிக்கு புதுமுக வேட்பாளராக டாக்டர் இந்திராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதில் அவருடைய மகன் வினோத் காந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் அமைச்சர் பொன்முடி கடந்த முறை போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி அவருடைய மகன் டாக்டர் கவுதமசிகாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
60 புதுமுகங்களுக்கு வாய்ப்பு:
கடந்த தேர்தலை விட 60 புதுமுக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, ஒட்டப்பிடாரம் (தனி), பரமக்குடி (தனி), கம்பம், போடிநாயக்கனூர், விராலிமலை, ஒரத்தநாடு, தஞ்சை, வேதாரண்யம், பெரம்பலூர், முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர், வேடசந்தூர், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, மேட்டுப்பாளையம், குன்னூர், கூடலூர் (தனி), கோபிசெட்டிப்பாளையம், அந்தியூர், பவானி, தாராபுரம் (தனி), குமாரபாளையம், நாமக்கல், சேந்தமங்கலம் (தனி), சேலம் தெற்கு, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஏற்காடு (பழங்குடி), கெங்கவல்லி (தனி), உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, ஆரணி, பாப்பிரெட்டிப்பட்டி, ஓசூர், பாலக்கோடு, வேப்பனஹள்ளி, ராணிப்பேட்டை, அம்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், ராயபுரம், திரு.வி.க.நகர் (தனி), அண்ணா நகர், எழும்பூர் (தனி), தியாகராயநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு புதுமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4 மேயர்களுக்கு வாய்ப்பு:
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு பெறப்பட்ட போது உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில் 4 மேயர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் மேயர் மகேஷுக்கு கன்னியாகுமரி தொகுதியும், தஞ்சை மேயர் சண்.ராமநாதனுக்கு தஞ்சை தொகுதியும், திருப்பூர் மேயர் தினேஷ்குமாருக்கு திருப்பூர் தெற்கு தொகுதியும், ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யாவுக்கு ஓசூர் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிற்றரசு கவுன்சிலர் ஆவார். இவர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் நிலைக்குழுத் தலைவராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தி.நகர் தொகுதி வேட்பாளர் ராஜா அன்பழகனும், அம்பத்தூர் வேட்பாளர் டாக்டர் பூர்ணிமா ஆகியோரும் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளனர்.
விஜய் களமிறங்கும் பெரம்பூரில் திமுக போட்டி:
தவெக தலைவர் விஜய் சென்னை ‘பெரம்பூர்’ தொகுதியில் களம் இறங்குகிறார். எனவே இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெறுகிறது. எனவே இந்த தொகுதி மீது அனைவரின் பார்வையும் திரும்பி இருக்கிறது. விஜய்யை எதிர்த்து திமுக – அதிமுக கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
இதையும் படிக்க : “நாட்டுல கொடுமைய பாருங்க”.. விஜய் குறித்து இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!
ஆனால் அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2001, 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 2 முறை வென்றதால் இந்த தொகுதியை விருப்ப பட்டியலில் கேட்டது. ஆனால் பெரம்பூர் தொகுதியில் மீண்டும் திமுக களம் காண்கிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 50,291 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்.டி.சேகர் மீண்டும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.