அதிமுகவில் 42 புது முகங்கள், 17 பெண்களுக்கு வாய்ப்பு.. 13 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு!!
Tamilnadu Assembly election: தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் 46 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 31 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் களம் காண்கின்றனர். முதல் கட்ட பட்டியலில் அதிமுக ஆட்சியின்போது சபாநாயகராக இருந்த தனபால் பெயர் இடம் பெறவில்லை. அவர் கடந்த முறை அவினாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார்.
Tamilnadu polls 2026: சட்டமன்ற தேர்தல் களத்தில் அதிமுக முழுவீச்சில் இறங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒப்பந்தத்தை முடித்து, அவர்களுக்கான இடங்களையும் அறிவித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 25ந்தேதி அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அந்த பட்டியலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்பட 23 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. அதைத் தொடர்ந்து அன்றைய தினமே ராயப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதையும் படிக்க: அரசியலில் தடம் பதிக்கும் இயக்குநர் சுந்தர்.சி.. சட்டமன்றத் தேர்தலில் போட்டி.. எந்த கட்சியில் தெரியுமா?
2-ம் கட்ட பட்டியல் வேட்பாளர் பட்டியல்:
இந்தநிலையில் அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி நேற்று பிற்பகலில் வெளியிட்டார். அதில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். ஆக இதுவரை அதிமுக சார்பில் மொத்தம் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் தற்போதைய எம்எல்ஏக்கள் , புதுமுகங்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள், பெண்கள் என கலவையாக இருந்தது. இதுவரை அறிவிக்கப்பட்ட 150 தொகுதிகளில், 17 பேர் பெண்கள். 42 பேர் புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர்.




தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் 46 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 31 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் களம் காண்கின்றனர். முதல் கட்ட பட்டியலில் அதிமுக ஆட்சியின்போது சபாநாயகராக இருந்த தனபால் பெயர் இடம் பெறவில்லை. அவர் கடந்த முறை அவினாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். தற்போது இந்த தொகுதி பாஜகவுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 2-வது கட்ட பட்டியலிலும் தனபால் பெயர் இல்லை.
சென்னையில் 14 தொகுதிகளில் அதிமுக போட்டி:
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மீண்டும் அதிமுகவிற்கு வந்த வெல்லமண்டி நடராஜனுக்கும் வாய்ப்பு தரவில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோசுக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மயிலாப்பூர் (பாஜக), பெரம்பூர் (பாமக), தவிர 14 தொகுதிகளில் அதிமுக களம் காண்கிறது. அதில் ராயபுரத்தில் ஜெயக்குமார் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திமுக கூட்டணி தொகுதி பட்டியல் வெளியாவதில் தாமதம்.. காங்., தேமுதிக விருப்ப இடங்களை கேட்டு பிடிவாதம்!!
17 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்:
அதிமுகவை பொறுத்தவரை 167 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 67 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. கூட்டணி கட்சிகள் சில அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதிமுக போட்டியிடும் 167 தொகுதிகளில் 150 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 17 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும். அதில் சில முக்கியமானவர்கள் பெயர்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.