தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… யார் யார் எந்த தொகுதியில் போட்டி!

Tamil Manila Congress Party Candidate: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் வெளியிட்டார். இதில், யார் யார் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற முழு விவரம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... யார் யார் எந்த தொகுதியில் போட்டி!

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated On: 

27 Mar 2026 13:24 PM

 IST

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ( அன்புமணி தரப்பு) 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதில், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மூன்று வேட்பாளர்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: வரும் தேர்தலில் திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி – த.வெ.க தலைவர் விஜய்..

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

அதன்படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி கே வாசன் வெளியிட்டார். இதில்,

  • ஈரோடு மேற்கு  – யுவராஜ் (புதுமுகம்).
  • ஒட்டன்சத்திரம் – எஸ். விடியல் சேகர் (தமாகா துணைத் தலைவர்) .
  • கிள்ளியூர் – ஜெ. சைமன் (தென் மண்டல இளைஞர் அணியின் துணைத் தலைவர்).
  • ராணிப்பேட்டை – கார்த்திகேயன்.
  • கும்பகோணம் – எம். க. ஆர். அசோக் குமார் (தமாகா மாநில செயலாளர்) . ஆகியோர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தாமரை சின்னத்தில் போட்டியிட காரணம் என்ன

இதைத் தொடர்ந்து, தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காத சூழ்நிலையால், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். கட்சி ஆரம்பித்த காலத்தில் தென்னந்தோப்பு சின்னம், ஆட்டோ சின்னம், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு உள்ளேன். எனவே, சின்னம் முக்கியம் கிடையாது. எங்களுடைய பணியும், களப்பணியும், கூட்டணியின் பலமும் முக்கியமாகும் என்பதை உணர்ந்து செயல்படுகிறோம்.

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்கிறது

அதிமுக தமிழகத்தின் முதல் கட்சியாகும். பாஜக இந்தியாவின் முதல் கட்சியாகும். இந்த இரண்டு கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது டபுள் எஞ்சின் சர்க்கார் ஆகவும், இந்த இரண்டு செல்லமும் நல்ல அரசை அமைக்கக்கூடிய சின்னமாக நாங்கள் கருதுகிறோம். அதன் அடிப்படையில் இந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: பொன்ராஜ் மீது விஜய் நேரில் புகார் – மனுவில் குறிப்பிட்டிருப்பது என்ன?

Follow Us
Related Stories
தென்காசி, விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை திரும்ப பெற்றுள்ளோம்.. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. மீதமுள்ள 12 தொகுதிகள் எப்போது வெளியாகும்?
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் எந்த தொகுதியில் போட்டி?
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – தேர்தல் ஆணையம் உத்தரவு..
Govi. Chezhiyan Tamil Nadu Election: திருவிடைமருதூரில் மும்முறை வெற்றி.. எம்எல்ஏ பதவியை தனதாக்கி கொள்வாரா கோவி.செழியன்!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு… பானை சின்னம் ஒதுக்காததற்கு காரணம் என்ன!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..