AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு… பானை சின்னம் ஒதுக்காததற்கு காரணம் என்ன!

Viduthalai Siruthaigal Katchi: புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் சுயேட்சைகளின் சின்னத்தை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒதுக்கீடு செய்து உள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு… பானை சின்னம் ஒதுக்காததற்கு காரணம் என்ன!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 27 Mar 2026 12:30 PM IST

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், ஒரு தொகுதி மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள், திமுகவுக்கு 12 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதனால், ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், 6 தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவும், புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். அதன்படி, புதுச்சேரியில் நெட்டப்பாக்கம், ஊசுடு, உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனியாக போட்டியிடுகிறது.

3 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள்

இதில், நெட்டப்பாக்கம் வேட்பாளர் அமுதவன் கட்சியின் ஏ மற்றும் பி படிவங்களை தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவில்லை. இதனால் அவரின் மனு சுயேச்சையாக ஏற்கப்பட்டது. இதே போல, ஊசுடு தொகுதி வேட்பாளர் அரிபுத்திரி மற்றும் உழவர்கரை வேட்பாளர் புஷ்பலதா ஆகியோரின் மனுக்கள் கட்சி சார்பில் ஏற்கப்பட்டாலும், அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்படாது என தெரியவந்தது. இதே போல, புதுச்சேரி மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கும் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்படவில்லை.

மேலும் படிக்க: யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு

இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னம் மட்டுமே வழங்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதன்படி, புதுச்சேரியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விசிக வேட்பாளர்கள் வாளி சின்னத்தில் போட்டியிட உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இண்டி கூட்டணிக்கு தலைமை வகித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது தொடர்பான மோதல் போக்கு இருந்து வருகிறது.

விசிக தனித்து போட்டியிட காரணம் என்ன

இதன் காரணமாக, தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், தொகுதிகள் பங்கீடு செய்யப்படாமல் இருந்த நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் குழப்பமான சூழலில் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்ப பெற மறுத்து விட்டனர். இந்த நிலையில் தான், புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டியிடும் என்று தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: ஒத்துழைப்பா? அதிகாரப் போட்டியா? – கூட்டணி அரசின் பின்னணி

Follow Us