இந்தியா முழுவதும் பான் கார்டு பெறும் விதிமுறைகளில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. ஏப்ரல் 1, 2026 முதல் புதிய பான் விதிகள் அமலுக்கு வருகிறது. இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க, ஆதார் கார்டு மட்டும் போதாது. பிறந்த தேதி உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயமாகிறது. அதாவது, பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 10ஆம் வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.