AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இபிஎஸ் பதவி விலக எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. நள்ளிரவில் பரபரப்பு!!

புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இபிஎஸ் பதவி விலக எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. நள்ளிரவில் பரபரப்பு!!
இபிஎஸ்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 May 2026 06:41 AM IST

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்று இருந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றெடுத்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது. அதோடு, இதுவரை இல்லாதவகையில், பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இதையும் படிக்க : ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

இபிஎஸ் முதலமைச்சராக வாய்ப்பு?

இதனிடையே, விஜய் ஒரு புறம் முதலமைச்சராக திமுக கூட்டணி கட்சிகளிடம் பேசிக்கொண்டு இருந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இரு தரப்பிலும் தீவிரமாக நடப்பதாக தீவிர பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. எனினும், அதில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக திமுக கூட்டணி கட்சிகள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்கள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தனர்.

இபிஎஸ் வீட்டில் ஆஜரான எம்எல்ஏக்கள்:

புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர். இதில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்து முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினர். அப்போதே எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக சிலர் குற்றம் சுமத்தி பேசி உள்ளதாக தெரிகிறது. பின்னர் இந்த கூட்டம் நிறைவடைந்தது. எனவே அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

சி.வி.சண்முகம் வீட்டில் கூட்டம்:

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் ஒன்று கூடினர். இரவு சுமார் 2.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட சுமார் 37 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராக சிலர் பேசியதாக கூறப்படுகிறது.

நள்ளிரைவை தாண்டி நடந்த ஆலோசனை:

இதையறிந்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு எம்எல்ஏக்களும் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தனர். இருப்பினும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இரவு 10.30 மணியை தாண்டியும் ஆலோசனை நடத்தினர்.

இபிஎஸ் பதவியில் இருந்து விலக வேண்டும்:

இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தானாக விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியை, நீக்குவதற்கு எம்எல்ஏ கூட்டத்தில் எப்படி முடிவு எடுக்க முடியும்? அது கட்சி கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்று சிலர் கூறுகின்றனர்.

இதையும் படிக்க : ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு – திருமாவளவன் பகிர்ந்த தகவல்

அதிமுகவில் ஏற்பட்டு உள்ள இந்த பிரச்சினை, இன்னும் ஓரிரு நாளில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னரும் அதிமுகவில் இதேபோல் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us