AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொள்கை அடிப்படையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ரே நாளில் திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. நன்றி தெரிவிக்க கூட அண்ணா அறிவாலயம் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
விஜய் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 May 2026 18:02 PM IST

சென்னை, மே 9 : தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காமல் திணறி வந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்த படி வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவு அளித்தன. இதனால் அந்த கட்சிக்கு தேவையான 118 எம்எல்ஏகளின் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து விஜய் 4வது முறையாக ஆளுநரை சந்திக்கவிருக்கிறார். இதற்கிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொள்கை அடிப்படையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன் என்றார்.

இதையும் படிக்க : அதிமுகவுக்கு ஆதரவளிக்க திமுக எங்களிடம் கேட்கவில்லை – எம்.ஏ.பேபி விளக்கம்

மு.க.ஸ்டாலினின் பதிவு

 

மேலும், ஒரே நாளில் திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. நன்றி தெரிவிக்க கூட அண்ணா அறிவாலயம் வரவில்லை. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து திமுகவுடன் கைகோத்துப் போராடுவோம் என CPI, CPIM, விசிக அறிவித்தது திமுக மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது“மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும். மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : மே 10-க்குள் புதிய அரசு அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்?.. என்ன நடக்கும்?

இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.

Follow Us