AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி..

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவு கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த சூழலில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு 116 இடங்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு மேலும் இரண்டு இடங்கள் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்  – எடப்பாடி பழனிசாமி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 May 2026 14:21 PM IST

மே 9, 2026: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், தற்போது வரை ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருந்து வருகிறது.

தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்குமா?

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவு கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த சூழலில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு 116 இடங்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு மேலும் இரண்டு இடங்கள் தேவைப்படுகிறது.

இதனை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக திருமாவளவனின் முடிவு இருந்து வருகிறது. அந்த முடிவை மாலை 4 மணிக்குள் அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. நேற்றைய தினம் டிடிவி தினகரன் தமிழக ஆளுநரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தார்.

மேலும், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்:

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி  ஆட்சி அமைக்க விருப்பம் காட்டவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

எனவே, திமுக தரப்பிலும் ஆட்சி அமைக்க கோரிக்கை முன்வைக்கப்படாத சூழலில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், தமிழக வெற்றி கழகத்திற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Follow Us