AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமாவளவன் ஏன் தயங்குகிறார்? திமுக முட்டுக்கட்டை போடுகிறது – தமிழிசை பரபரப்பு கருத்து

TVK Vijay : விஜய்யின் தவெக ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் சிக்கலில் இருக்கும் நிலையில் பாஜக நிர்வாகி தமிழிசை வீடியோ ஒன்றை பகரிந்துள்ளார். அதில், திமுக ஆதரவு அளிப்பதாக சொல்லிவிட்டு பின்னால் இருந்து அதற்கு பல முட்டுக்கட்டைகளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

திருமாவளவன் ஏன் தயங்குகிறார்? திமுக முட்டுக்கட்டை போடுகிறது – தமிழிசை பரபரப்பு கருத்து
விஜய் - தமிழிசை
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 May 2026 14:56 PM IST

சென்னை, மே 4 : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிற கட்சிகளுடன் ஆதரவை நாடி வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு தர மறுத்துவிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்னும் தனது முடிவை அறிவிக்காமல் இருக்கிறார். இதனால் தவெக ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இதற்கிடையில் தவெக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததற்கு பாஜக காரணம் என கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தல் வீடியோ வெளியிட்டார்.

இதையும் படிக்க : “தவெக வெளியிட்ட வீடியோ போலியானது”.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்”.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

தமிழிசை சௌந்தரராஜன் பகிர்ந்த வீடியோ


அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, முழுமையான எண்ணிக்கையில்லாத காரணத்தால் 3 முறை விஜய் ஆளுநரை சந்தித்தும் அவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. நீங்கள் எண்ணிக்கைோடு வாருங்கள் நாங்கள் அனுமதி தருகிறோம் என ஆளுநர் மாளிகை தெளிவாக சொல்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் உரிய எண்ணிக்கையில்லாமல் சென்றுவிட்டு ஆளுநர் மீது பழிபோடுவது நியாயமில்லை. இது மக்களின் நம்பிக்கையை பெற்றதாக ஆகாது என்றார்.

மேலும் பேசிய அவர், அது மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்தில் திமுக தலைவர், தனிப்பெரும் கட்சியை அழைக்க வேண்டும் என சொல்லிவிட்டு பின்னால் இருந்து அதற்கு பல முட்டுக்கட்டைகளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் ஆதரவு அளித்துவிட்டு பாஜக ஆளுநருக்கு பின்னால் இருந்து அழுத்தம் தருவதாக சொல்கிறார்கள் அதில் உண்மை இல்லை.

இதையும் படிக்க : ஒரு பக்கம் த.வெ.க.. மற்றொரு பக்கம் அதிமுக.. இன்று சென்னையில் நடக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..

திருமாவளவன் ஆதரவுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் திருமாவளவன் ஏன் தயங்குகிறார் என்ன பேரம் பேசிக்கொண்டிருக்கிறார் . இவர்கள் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக முடிவுகளை எடுத்துவிட்டு பாஜகவை எந்த விதத்திலும் பழி சொல்வது நியாயமில்லை. காங்கிரஸ் கட்சி திமுகவிடம் இருந்து உறவை முறித்துவிட்டு இன்று அவர்களுக்கே எத்தனை எம்எல்ஏகள் ஆதரவு தருகிறார்கள் என தெரியாமல் ஹைதரபாத் சென்றிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us