AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மறுபடியும் ஒரு ‘வெளியிலிருந்து ஆதரவு’ அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?

தமிழகத்திலும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக அரசுக்கு காங்கிரஸ், பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. தற்போது தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், ‘தொங்கு சட்டமன்றம்’ அமைந்தது.

மறுபடியும் ஒரு ‘வெளியிலிருந்து ஆதரவு’ அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?
கம்யூனிஸட் ஆலுவலகத்தில் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 May 2026 08:49 AM IST

சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், காங்கிரஸ் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்ட தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. தொடர்ந்து, நேற்றைய தினம் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தவெகவுக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. கூட்டணி எதுவும் கிடையாது, வெளியே இருந்து மட்டும் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. இத்தகைய அரசியல் நகர்வின் வரலாற்று பின்னணியையும், இடதுசாரிகள் இத்தகைய ஆதரவின் மூலம் சாதித்த முக்கிய மாற்றங்களையும் இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

இதையும் படிக்க : தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு – மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

1996 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்:

1996 நாடாளுமன்றத் தேர்தலில் 32 இடங்களைப் பெற்றிருந்த CPM கட்சிக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், அக்கட்சியின் மத்திய குழு அந்த வாய்ப்பை நிராகரித்து, ஐக்கிய முன்னணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. அதே சமயம், CPI கட்சி அந்த கூட்டணியில் இணைந்து, அக்கட்சியின் மூத்தத் தலைவர் இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு:

2004 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தனர். இந்த ஆதரவின் நிபந்தனையாக, ‘குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டம்’ உருவாக்கப்பட்டு, அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான சட்டங்களை அறியலாம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்): ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம்: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர இந்தச் சட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. வன உரிமைச் சட்டம்: பழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : “திமுகவுக்கு காங்கிரஸ் செய்தது துரோகம்”.. திடீரென கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

தமிழக அரசியலில் இடதுசாரிகள்:

தமிழகத்திலும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக அரசுக்கு காங்கிரஸ், பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. தற்போது தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், ‘தொங்கு சட்டமன்றம்’ அமைந்தது. இந்தச் சூழலில், தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க, இடதுசாரி கட்சிகள் மீண்டும் ஒருமுறை வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

இவ்வாறு, இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதும், மக்கள் நலன் சார்ந்த சட்டங்களைக் கொண்டு வருவதில் மிக முக்கியமான பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us