தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு – மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் வென்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக ஆட்சியமைக்க முழு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து தவெக ஆதரவு எம்எல்ஏகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, மே 8 : ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு செயற்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்குழு முடிவை மாநிலக்குழுவில் விவாதித்து ஒப்புதல் பெற திட்டம் எனவும் மாநிலக்குழுவில் விஜய் ஆதரவு நிலைப்பாட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக ஆட்சியமைக்க தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் வென்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக ஆட்சியமைக்க முழு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து தவெக எம்எல்ஏகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தளி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி தொகுதியில் வென்ற மாரிமுத்து ஆகியோர் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.




இதையும் படிக்க : “திமுகவுக்கு காங்கிரஸ் செய்தது துரோகம்”.. திடீரென கொந்தளித்த வானதி சீனிவாசன்!!
தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு
#WATCH | Tamil Nadu: TVK workers and supporters celebrate outside the party headquarters in Chennai, amid reports of CPI, CPI(M) and VCK extending support to the party. pic.twitter.com/y4XOm222al
— ANI (@ANI) May 8, 2026
இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு வந்த தவெக நிர்வாகி நிர்மல் குமார் அக்கட்சியின் எம்எல்ஏகளின் ஆதரவு கடிதத்தை பெற்று சென்றார். இதற்கிடையில் ஆளுநரை விஜய் மீண்டும் மாலை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏகளின் ஆதரவு கடிதத்தையும் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் வென்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக ஆட்சியமைக்க முழு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து தவெக ஆதரவு எம்எல்ஏகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க : “வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?”.. விஜய் நேரில் வராதது ஏன்?.. தவெகவுக்கு விசிக சரமாரி கேள்வி!!
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் மாலை நடைபெறவுள்ள நிலையில் தவெகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாடு குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தனது நிலைப்பாடு குறித்து மே 9, 2026 நாளை தெரிவிக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அவரது ஆதரவு கிடைத்தால் 118 எம்எல்ஏகளுடன் தவெக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.