AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!

Congress President Rahul Gandhi: தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர். எஸ். எஸுக்கு அதிமுக தலைவர்கள் அடிபணிந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!
பாஜகவிடம் அதிமுக தலைவர்கள் அடிபணிந்துள்ளனர்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 20 Apr 2026 13:40 PM IST

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்று திங்கள்கிழமை (ஏப்ரல் 20) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலில் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்கள் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருந்தாலும் அவர்களுக்கான மரியாதையை இந்திய அரசியலமைப்பின் படி பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு கலாச்சாரமும், ஒவ்வொரு மொழியும் வருங்காலத்துக்கான கனவுகளை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாகரிகம் என்பது புதிய நாகரிகம் அல்ல. உலகின் மிக மிக தொன்மையான நாகரீகம் ஆகும். தற்போது பாஜக இந்தியாவுக்கான புதிய திட்டத்தை கொண்டுள்ளது. அவர்கள் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரலாறு, ஒரே சித்தாந்தம் என்ற கருத்தை வெளிப்படையாக பேசுகின்றனர்.

பாஜக சித்தாந்தத்துக்கு அடி பணிய வேண்டுமா

இந்தியாவில் ஒரே மொழி தான் இருக்கிறது என்றால் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் வரலாறு எங்கே இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களும் தங்களது சித்தாந்தத்துக்கு அடிபணிய வேண்டும் என்று நினைக்கிறது. அனைத்து மாநிலங்களின் சிறப்பு வாய்ந்த மொழிகளும் தங்களது நோக்கத்துக்கு கீழே அடிமைப்படுத்த வேண்டும் என்று பாஜக எண்ணுகிறது. இது இந்தியாவில் உள்ள இரு சித்தாந்தங்களுக்கு இடையே போராட்டமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்களை தானே ஆண்டு கொள்ள வேண்டும் என்ற உரிமை உள்ளதாக நம்புகிறோம்.

மேலும் படிக்க: ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.

தமிழகத்தில் பாஜக ஊடுருவ முயற்சி

அனைத்து மாநிலங்களும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்துக்கு கீழே அடிபணிந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக எப்படியாவது ஊடுருவ வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. அதிமுக ஒரு பாரம்பரியமான வரலாற்றை தமிழகத்தில் கொண்டிருந்தது. அதிமுகவில் இருந்த முக்கியமான தலைவர்கள் தமிழகத்திற்கான வரலாற்றை பாதுகாத்தனர். தற்போது இருக்கிற அதிமுக முந்தைய காலத்தில் இருந்த அதிமுகவாக இல்லை. அதிமுக தற்போது தத்துவார்த்தம் இல்லாத வெற்று கூடாக உள்ளது.  அதிமுகவின் தலைவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸுக்கு அடி பணிந்து சரணடைந்துள்ளனர். பாஜகவால் நேரடியாக தமிழகத்தையும், தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் தாக்க முடியாது.

அதிமுக முகமூடி மூலமாக பாஜக

அவர்கள் அதிமுக என்ற முகமூடியை பயன்படுத்தி வருகின்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் கட்டி காக்க போராடி வருகிறது. அதிமுகவின் முகமூடி அணிந்துள்ள பாஜக தமிழகத்தை அழிக்க நினைக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் மீது பாஜக மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியது. அதில், தொகுதி மறு வரை மூலம் இந்தியாவின் வரைபடத்தை மாற்றி அமைப்பதற்கான மசோதாவை பாஜக மறைமுகமாக தாக்கல் செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..

Follow Us