AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்எல்ஏ பதவி விவகாரம்.. அன்புமணி ஆதரவாளர் – ராமதாஸ் பேரன் முகுந்தன் பேசிய ஆடியோ வைரல்!

Ramadoss Grandson Mukundan Audio: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, ராமதாஸ் பேரன் முகுந்தனுக்கு எம்எல்ஏ பதவி தருவதாக அவரது ஆதரவாளர் கூறியிருந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் என்ன உள்ளது என்பதை பார்ப்போம்.

எம்எல்ஏ பதவி விவகாரம்.. அன்புமணி ஆதரவாளர் – ராமதாஸ் பேரன் முகுந்தன் பேசிய ஆடியோ வைரல்!
ராமதாஸ் பேரன் முகுந்தன் ஆடியோ கசிவு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 20 Apr 2026 06:26 AM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தனுக்கு பாமகவின் இளைஞர் அணி சங்கத்தில் மாநிலத் தலைவர் பதவி வழங்குவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். அப்போது, அதே மேடையில் அமர்ந்திருந்த கட்சியின் தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மேடையிலேயே கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் கட்சிப் பதவி வழங்காமல், புதிய நபருக்கு பதவி வழங்குகிறீர்கள் என்று ராமதாஸிடம் கோபமாக பேசியிருந்தார். இந்த சம்பவம் முதல் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்கட்சி மோதல் ஏற்பட்டு நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தேர்தலிலும் இருவரும் தனித்தனியாக போட்டியிட உள்ளனர்.

முகுந்தன்- அன்புமணி ஆதரவாளர் ஆடியோ

இதைத் தொடர்ந்து, முகுந்தன் தனக்கு வழங்கப்பட்ட இளைஞர் அணி மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு துணையாக தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில், ராமதாஸ் பேரன் முகுந்தன் மற்றும் அன்புமணி ஆதரவாளரான ஒருவரும் செல்போனில் பேசிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் அன்புமணியின் ஆதரவு பிரமுகர் பேசுகையில், நான் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியிடம் ஏற்கனவே கூறியுள்ளேன்.

மேலும் படிக்க: மயிலாப்பூரில் தமிழிசைக்கு ஆதரவாக உள்துறை அமித் ஷா பரப்புரை

எம்எல்ஏ பதவி தருவதாக அன்புமணி உறுதி

அதன்படி, உங்களை ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி எம்எல்ஏ ஆக்குவதாகவும், அதற்கான செலவை தானே ஏற்பதாகவும் அன்புமணி கூறியுள்ளார். மேலும், உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியில் பதவி வழங்குவது பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார் என அந்த நபர் கூறுகிறார். அதற்கு, பாமக நிறுவனர் முகுந்தன் வேறு எதுவும் சொல்லாமல் சரி என்று கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆடியோவை வெளியிடுவதாக கூறியிருந்த முகுந்தன்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி மற்றும் அவரது பேரன் முகுந்தன் ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தனக்கு எம்எல்ஏ சீட் தருவதாகவும், அதற்கான தேர்தல் செலவினத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொள்வதாகவும் அவரது ஆதரவாளர் ஒருவர் என்னிடம் கூறினார். அந்த ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசை யாரும் நம்பாதீர்கள். அவர், பதவி மற்றும் பணத்தாசை பிடித்தவர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பெரம்பூர் தொகுதிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்.. விஜய்யை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

Follow Us