AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி.. கரூரில் சீறிய எடப்பாடி பழனிசாமி!

Edappadi Criticized Senthil Balaji : கரூர் தொகுதியில் தற்போதைய எம். எல். ஏ.வான செந்தில்பாலாஜி தனது பலவீனம் காரணமாக வேறு தொகுதியில் போட்டியிட சென்று விட்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தாார்.

தேர்தல் தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி.. கரூரில் சீறிய எடப்பாடி பழனிசாமி!
செந்தில் பாலாஜி மீது எடப்பாடி கடும் விமர்சனம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 19 Apr 2026 20:50 PM IST

தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 21- ஆம் தேதியுடன் ( செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கரூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 19) எடப்பாடி கே. பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் உள்ள நமது எதிரி நம்மை சற்று பலவீனமாக எண்ணி உள்ளார். அவர் யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும். அவருடைய பலவீனம் காரணமாக கரூரை விட்டும், கரூர் மாவட்டத்தை விட்டும் ஓடிவிட்டார்.

கரூரில் 4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக

கரூர் மாவட்ட தொகுதியில் அதிமுக மட்டுமே 4 தொகுதிகளில் தேர்தலை சந்திக்க உள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு தொகுதியாவது கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும். ஆனால், கரூரில் எதிர்க் கட்சிகளை வீழ்த்துவதற்காகவே அதிமுகவின் முழு பலத்தையும் காண்பிப்பதற்காக தனியாக தேர்தலை சந்திக்கிறது. அதிமுக என்ற மாபெரும் இயக்கம் தமிழக மக்களை நம்பி இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளை நம்பியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக இருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார்.

மேலும் படிக்க: மு.க. ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடுத்த பியூஷ் கோயல்.. தமிழக அரசியலில் பரபரப்பு.. என்ன காரணம்!

திமுக வலிமையாக இருப்பதாக மு க ஸ்டாலின் கூறவில்லை

ஆனால், திமுக வலிமையாக இருப்பதாக ஸ்டாலின் கூறவில்லை. இந்த மாவட்டத்தில் அதிமுகவினரை எப்படி பழி வாங்கினார்கள் என்று எனக்கு தெரியும். ஆட்சி மாறினால் காட்சியும் மாறும். கரூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மணல் திருட்டு வழக்கு, பி சி ஆர் வழக்கு, போதை மாத்திரை பொய் வழக்கு என்று அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த உடன் மேற்கண்ட வழக்குகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.

பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை

அதில் பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்று தரப்படும். அந்த காலக் கட்டத்தில் இருந்த பழனிசாமி வேறு. தற்போது இருக்கின்ற பழனிசாமி வேறு என்று தெரிவித்தார். அதிமுகவில் இருந்து வந்த செந்தில்பாலாஜி அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் மீதான வழக்கு விசாரணையால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, அவர் கரூர் தொகுதியில் போட்டியிடாமல் கோவை தொகுதிக்கு மாறி சென்றுள்ளார். அதை எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் படிக்க: திமுக கூட்டணிக்கு ஆதரவாக மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை!

Follow Us