AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக தலைவர் விஜய்யின் தலை மீது பட்டு தெறித்த பாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த பவுன்சர்கள்!

TVK Leader Vijay: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்த போது, தொண்டர் வீசிய 7-அப் பாட்டில் விஜய்யின் தலை மீது பட்டு தெறித்து அருகில் இருந்த பவுன்சர் நயீம் மூசா முகத்தில் பட்டு கீழே விழுந்தது.

தவெக தலைவர் விஜய்யின் தலை மீது பட்டு தெறித்த பாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த பவுன்சர்கள்!
விஜய் தலை மீது பட்டு தெறித் குளிர்பான பாட்டில்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 20 Apr 2026 12:57 PM IST

தமிழகத்தில் தேர்தல் வந்து விட்டாலே “சின்ராசை கையில் பிடிக்க முடியாது” என்பது போல அரசியல் கட்சியினரும், அந்ததந்த கட்சிகளின் தொண்டர்களும் படு குஷியாகி விடுவர். ஏனென்றால், மற்ற நிகழ்வுகளில் கிடைக்கும் மகிழ்ச்சியை போல தேர்தல் நேரங்களிலும், தங்களது கட்சியின் தலைவர், தங்கள் தொகுதியின் வேட்பாளர் ஆகியோர் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அதில் கிடைக்கும் சந்தோஷமும் தொண்டர்களை தொற்றிக் கொள்ளும் என்பதனால் தான். இதனால், வாக்கு சேகரித்து வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொகுதிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தொண்டர்கள் ஆளுயர பூ மாலை அணிவிப்பது, ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வினோதமான நிகழ்வுகளை திட்டமிட்டு செய்யத் தொடங்கி வருவர். இதில், சற்று கேலிக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாவும்.

திருச்சியில் ரோடு ஷோ மேற்கொண்ட விஜய்

அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் தொகுதிகள் வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அவர் போட்டியிடக் கூடிய திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 19) தீவிர பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோவில் பங்கேற்று இருந்தார். அப்போதுதான், இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சிக் குள்ளாக்கும் நிகழ்வு நடந்தது. அது என்னவெனில், திருச்சியில் நகர பகுதியில் தவெக தலைவர் விஜய் வாகனத்தின் மேல் பகுதியில் நின்று கொண்டு ரோடு ஷோ சென்றார்.

மேலும் படிக்க: ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.

விஜய் தலை மீது பட்டு தெறித்த குளிர்பான பாட்டில்

அப்போது, அவரை பார்ப்பதற்காக திரண்டிருந்த கூட்டத்தினுள் நின்று கொண்டிருந்த ஒரு நபர் திடீரென 7- அப் பாட்டிலை விஜயை நோக்கி வீசினார். இதை பார்த்த பவுன்சர் அதை தனது கைகளால் தடுக்க முயன்றார். ஆனால், அவரது கையை மீறி சென்ற அந்த குளிர்பான பாட்டில் விஜயின் நடு தலையில் பட்டு தெறித்து அருகில் இருந்த பவுன்சரான நயீம் மூசாவின் இடது கன்னத்தில் பட்டு கீழே விழுந்தது. இதில், விஜய் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளானார். இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விஜய்யின் வாகனத்துக்குள் ஒரு நபர் முழு தர்பூசணி பழத்தை வீசினார்.

விஜய் வாகனத்துக்குள் தர்ப்பூசணியை வீசிய நபர்

இதனை சற்றும் எதிர்பாராத விஜய் அதிர்ச்சி அடைந்தவுடன், அந்த தர்ப்பூசணி பழம் வாகனத்தின் மேல் புறமாக உள்ளே சென்று விழுந்தது. மற்றொரு ஊரில் பிரச்சாரத்தின் போது அவரது தொண்டர் ஒருவர் கண்ணில் அணியக்கூடிய கண்ணாடியை தூக்கி வீசினார். அதனை லாவகமாக பிடித்த விஜய் தனது கண்ணில் அணிந்து கொண்டார். இதேபோல, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் பூ மாலையுடன் சேர்த்து செல்போனையும் தூக்கி எறிந்தார். அந்த செல்போன் அண்ணாமலையின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Voter ID இல்லையா? கவலையை விடுங்க.. இந்த லிஸ்ட்ல ஒன்னு இருந்தா போதும்.. என்ன அது!

Follow Us